Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

38வது முறையாக டக் அவுட்.. நம்பர் 3 வரிசையில் ராசியே கிடையாது.. விராட் கோலியின் மோசமான சாதனை!

பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலமாக இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி மோசமான சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், 2வது நாளில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ind vs nz virat kohli sarfaraz khan

கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களிலும், விராட் கோலி மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் டக் அவுட்டாகியும் வெளியேறினார். அதிலும் சின்னச்சாமி மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கினார்.

ஏற்கனவே நம்பர் 3ல் களமிறங்கி விராட் கோலி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார். நம்பர் 3ல் 6 முறை பேட்டிங் ஆடியுள்ள விராட் கோலி ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை. அவரின் பேட்டிங் சராசரி வெறும் 16.16ஆக மட்டுமே இருந்திருக்கிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் விராட் கோலி டக் அவுட்டாகி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டியில் டக் அவுட்டானதன் மூலமாக விராட் கோலி, சின்னச்சாமி மைதானத்தில் 4வது முறையாக டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். இதன்பின் சேப்பாக்கம் மற்றும் அகமதாபாத் ஆகிய மைதானங்களில் தலா 3 முறை விராட் கோலி டக் அவுட்டாகி இருக்கிறார். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 38வது முறையாக டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார்.

இதன் மூலமாக இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் ஜாகீர் கான் 43 முறை டக் அவுட்டாகி முதல் இடத்திலும், இஷாந்த் சர்மா 40 முறை டக் அவுட்டாகி 2வது இடத்திலும் இருக்கின்றனர். அதேபோல் நடப்பாண்டில் தொடர்ந்து 7வது முறையாக அரைசதம் அடிக்காமல் விராட் கோலி வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது,

Story first published: Thursday, October 17, 2024, 10:50 [IST]
Other articles published on Oct 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+