Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்தியாவுக்குன்னே வருவீங்களா? டிராவிஸ் ஹெட்டாக மாறிய நியூசிலாந்து வீரர் டாரில் மிட்செல்

இந்தூர்: இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரிய தலைவலியாக மாறி இருக்கிறார் நியூசிலாந்து வீரர் டாரில் மிட்செல். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் எப்படி இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து ரன் குவிப்பாரோ, சதம் மேல் சதம் அடிப்பாரோ அதேபோல தற்போது டாரில் மிட்செல் மாறிவிட்டார்.

இந்தூர் ஒருநாள் போட்டியில் அவர் அடித்த சதத்தைப் பார்த்து இந்திய ரசிகர்கள் அவரை "புதிய டிராவிஸ் ஹெட்" என்றே அழைக்கத் தொடங்கிவிட்டனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாரில் மிட்செல் மீண்டும் ஒரு பிரம்மாண்ட சதத்தை பதிவு செய்தார். ராஜ்கோட் போட்டியில் சதம் அடித்த கையோடு, இந்தூர் போட்டியிலும் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து, இந்தத் தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார்.

IND vs NZ 3rd ODI Daryl Mitchell is India s New Travis Head says fans after back to back centuries

மிகவும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடிய மிட்செல், ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் ஒரு ரன் எடுத்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். சதமடித்த அந்த நொடியில், தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத மிட்செல், மைதானத்தில் ஆக்ரோஷமாக கர்ஜித்து கொண்டாடினார்.

டிரஸ்ஸிங் ரூமில் இருந்த நியூசிலாந்து வீரர்கள் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். இது ஒருநாள் கிரிக்கெட்டில் மிட்செல் அடிக்கும் 9-வது சதமாகும். இந்த சதத்தின் மூலம் டாரில் மிட்செல் பல வரலாற்றுச் சாதனைகளை மாற்றி அமைத்துள்ளார்.

இந்திய மண்ணில், இந்திய அணிக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ்க்கு (5 சதங்கள்) அடுத்தபடியாக மிட்செல் (4 சதங்கள்) 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், டிவில்லியர்ஸ் 11 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்தார். ஆனால் மிட்செல் வெறும் 7 இன்னிங்ஸ்களிலேயே 4 சதங்களை விளாசி மிரட்டியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக கடைசியாக மிட்செல் விளையாடிய 7 ஒருநாள் இன்னிங்ஸ்களின் ஸ்கோர் விவரம் இதோ - 130, 134, 17, 63, 84, 131, 137.* மேலும், இந்திய மண்ணில் தொடர்ந்து 5 முறை 50+ ரன்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் இவர் வசம் வந்துள்ளது.

கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும், மிட்செல் தனி ஆளாக நின்று இந்திய அணியை திணறடித்ததை பார்த்து ரசிகர்கள் ட்விட்டரில் (X தளம்) கருத்து மழை பொழிந்து வருகின்றனர்.

"டிராவிஸ் ஹெட்டின் ஆவி மிட்செல் உடம்புக்குள் புகுந்துவிட்டது போல.. இந்தியாவை இப்படி பந்தாடுகிறாரே!", "இந்திய அணியின் புதிய எதிரிகள் கிளப்பில் மிட்செல் இணைந்துவிட்டார்.","இந்திய அணியின் ஓனர் போல செயல்படுகிறார்." என்று ரசிகர்கள் வேடிக்கையாகவும், ஆதங்கத்துடனும் பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Sunday, January 18, 2026, 19:29 [IST]
Other articles published on Jan 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+