For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திருவனந்தபுரம் டி20: 8 ஓவர் த்ரில் போட்டியில் நியூசி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

By Shyamsundar

திருவனந்தபுரம்: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.

டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டி இந்திய அணியும் , ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது.

IND vs NZ: 3rd t20 cricket match

திருவனந்தபுரத்தில் மூன்றாவது டி20 இன்று நடைபெற்றது. திருவனந்தபுரம் மைதானத்தில் மழை பெய்ததால் போட்டி நடைபெறுவது சந்தேகமாக இருந்தது. இந்த நிலையில் இரவு 7 மணிக்கு பதிலாக 9 மணிக்கு மேல் தொடங்கியது.

எனவே 20 ஓவர்கள் 8ஆக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற யூசிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.

இதையடுத்து இந்தியா பேட் செய்து 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 67 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 17, கோஹ்லி 13 ரன்கள் எடுத்தனர். பாண்ட்யா 14 ரன்களுடனும், டோணி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் நின்றனர். டிம்சவுத்தி, சோடி தலா 2 விக்கெட்டுகளையும், டிரென்ட் பவுல்ட் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

68 என்ற இலக்கை விரட்டிச் சென்ற நியூசிலாந்து அணி 8 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 61 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நியூசி. தரப்பில் கோலின்டே கிராண்டோமே அதிகபட்சம் 17 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். இந்திய தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர்குமார் மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Story first published: Tuesday, November 7, 2017, 23:18 [IST]
Other articles published on Nov 7, 2017
English summary
The third T-20 match between India and New Zealand has started in Thiruvananthapuram, Kerala now. New Zealand won the toss against India and choose to bowl first.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X