For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ: "அபிஷேக்கை பார்த்து நீங்க ஆடாதீங்க”.. தொடர் சொதப்பல்.. சஞ்சு சாம்சனுக்கு ரஹானே அட்வைஸ்

கவுஹாத்தி: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தாலும், துவக்க வீரர் சஞ்சு சாம்சனின் மோசமான ஆட்டம் தற்போது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சஞ்சு சாம்சன் தனது இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்றும், அபிஷேக் சர்மாவைப் பார்த்து அதே வேகத்தில் ஆட முயற்சிக்கக் கூடாது என்றும் மூத்த வீரர் அஜிங்கியா ரஹானே அறிவுரை வழங்கியுள்ளார்.

கவுஹாத்தியில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆனால், துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து டக் அவுட் ஆனார். 2026 ஆம் ஆண்டில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் அவர் மொத்தம் 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

IND vs NZ Ajinkya Rahane s Crucial Advice to Sanju Samson to Regain Form before World Cup

துவக்க வீரராகக் களமிறங்கிய கடைசி 9 இன்னிங்ஸ்களில் அவர் வெறும் 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 11.55 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 133 ஆகவும் உள்ளது. டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில், சஞ்சு சாம்சனின் இந்த மோசமான ஃபார்ம் அணி நிர்வாகத்திற்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ரஹானேவின் அறிவுரை

இது குறித்து கிரிக்கெட் இணையதளத்தில் பேசிய அஜிங்கியா ரஹானே, சஞ்சு சாம்சனுக்கு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார். "எதிர்முனையில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுவதைப் பார்த்து, சஞ்சு சாம்சன் தானும் அவரைப் போலவே வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார். தயவு செய்து அபிஷேக் சர்மா செய்வதை நீங்களும் செய்ய முயற்சிக்காதீர்கள்.

சஞ்சு சாம்சனுக்கு என்று தனித்திறமை உள்ளது. அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும். சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அவர் தனது பாணியில் விளையாடி ரன்களைக் குவித்தார். அதைத் தான் இங்கேயும் செய்ய வேண்டும். அபிஷேக் சர்மாவுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளாமல், தன் மீது நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும்" என்று ரஹானே கூறினார்.

கேப்டன் கொடுக்க வேண்டிய நம்பிக்கை

மேலும் பேசிய அவர், "இந்த நேரத்தில் அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சஞ்சு சாம்சனுக்குத் துணையாக இருக்க வேண்டும். 'இந்தத் தொடர் முழுவதும் மற்றும் உலகக்கோப்பையிலும் நீங்கள்தான் துவக்க வீரர், உங்கள் இடத்திற்கு ஆபத்து இல்லை' என்ற நம்பிக்கையை அவருக்குக் கொடுக்க வேண்டும்.

இஷான் கிஷன் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், சஞ்சு சாம்சனுக்குப் பயம் ஏற்படுவது இயல்பு. ஆனால் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து, அவரது பாணியில் விளையாட அனுமதித்தால் அவர் நிச்சயம் ஒரு மேட்ச் வின்னராக மாறுவார்" என்று ரஹானே தெரிவித்தார்.

ஆரம்பத்தில் நிதானம் தேவை

சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்ப ஒரு வழியையும் ரஹானே கூறினார். "ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் எப்படி ஆடுவார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். எடுத்த உடனே அதிரடியாக ஆடாமல், முதல் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் களத்தில் நிலைத்து நிற்க வேண்டும். 15 பந்துகளில் 25 ரன்கள் அல்லது 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் கூடப் போதும். களத்தில் சிறிது நேரம் செலவிட்டு, பந்துவீச்சை கணித்த பிறகு தனது அதிரடியைத் தொடங்கலாம்" என்று டிப்ஸ் கொடுத்துள்ளார்.

இந்திய அணி ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள நான்காவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் தனது இயல்பான ஆட்டத்தை ஆடி ஃபார்மை மீட்பாரா?

Story first published: Monday, January 26, 2026, 10:37 [IST]
Other articles published on Jan 26, 2026
English summary
IND vs NZ: Former Indian captain Ajinkya Rahane has urged Sanju Samson to stop competing with Abhishek Sharma's aggressive strike rate and focus on his natural game
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+