Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் டீமில் இடம் பிடிப்பது கஷ்டம் தான்.. காரணம் அந்த வீரர்.. இந்திய அணியின் திட்டம் இதுதான்!

Recommended Video

IND VS NZ TEST SERIES 2020 | Ashwin or Jadeja in playing 11?

ஹாமில்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன டெஸ்ட் தொடரில் அஸ்வின் அல்லது ஜடேஜா இருவரில் ஒருவர் தான் அணியில் ஆட முடியும் என கூறப்படுகிறது.

இந்தியா அணி அடுத்து டெஸ்ட் தொடருக்கு தயார் ஆகி வருகிறது. இந்த நிலையில், அணியில் யார், யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி ஒரு சுழற் பந்துவீச்சாளரை மட்டுமே பயன்படுத்தும் என்பதால், அஸ்வின், ஜடேஜா இருவரில் ஒருவர் மட்டுமே அணியில் இடம் பெற முடியும்.

டி20 தொடர் வெற்றி

டி20 தொடர் வெற்றி

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் டி20 தொடரில் பங்கேற்றது. அந்த தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, இரண்டு போட்டிகளை சூப்பர் ஓவரில் சென்று வீழ்த்தியது. அனைத்து போட்டிகளையும் வென்ற இந்திய அணி தொடரை 5 - 0 என வீழ்த்தியது.

ஒருநாள் தொடர் தோல்வி

ஒருநாள் தொடர் தோல்வி

அடுத்து நடந்த ஒருநாள் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்த்த நிலையில், அந்த தொடரில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது. அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்த இந்தியா, 3 - 0 என தொடரை இழந்தது.

மோசமான நிலை

மோசமான நிலை

ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பீல்டிங், பந்துவீச்சு, டாப் ஆர்டர் பேட்டிங் என பல பிரச்சனைகள் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. டி20 தொடரில் நம்பிக்கை அளித்த, இந்திய அணி தற்போது நம்பிக்கை இழந்து காட்சி அளிக்கிறது.

அடுத்த திட்டம்

அடுத்த திட்டம்

அடுத்து டெஸ்ட் தொடரில் இரு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இருக்கும் இந்திய அணி அதற்காக பயிற்சிப் போட்டியை பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது. எந்தெந்த வீரர்கள் அணியில் இடம் பெற இருக்கிறார்கள் என்பது அதன் முடிவில் தெரிய வரும்.

சுழற் பந்துவீச்சாளர் யார்?

சுழற் பந்துவீச்சாளர் யார்?

குறிப்பாக, ஒரு சுழற் பந்துவீச்சாளரை மட்டுமே அணியில் சேர்க்க உள்ளது இந்திய அணி. நியூசிலாந்து ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சுக்கே அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் ஒரு சுழற் பந்துவீச்சாளரே போதும் என இந்திய அணி முடிவு எடுக்கும் என முன்னாள் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர்.

அஸ்வின் நிலை

அஸ்வின் நிலை

உத்தேச அணியில் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவர் மட்டுமே அணியில் இடம் பெற்றுள்ளனர். அஸ்வின் ரஞ்சி தொடரில் கலந்து கொண்டு ஆடினார். அடுத்து நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ஆடிய இந்தியா ஏ அணியிலும் அவர் இடம் பெற்றார். அதில் அவர் அதிக விக்கெட்கள் வீழ்த்தவில்லை.

ஜடேஜா அபாரம்

ஜடேஜா அபாரம்

மறுபுறம் ஜடேஜா டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றார். இரண்டிலும் அபாரமாக பந்து வீசி இருந்தார். எனவே, ஜடேஜாவுக்கு தான் டெஸ்ட் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. அஸ்வின் அணியில் இடம் பெறுவது கடினம் என கூறப்படுகிறது.

பயிற்சிப் போட்டி

பயிற்சிப் போட்டி

எனினும், பயிற்சிப் போட்டியில் அஸ்வின், ஜடேஜா என இருவருக்கும் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படலாம். அப்போது அஸ்வின் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் அவர் டெஸ்ட் அணியில் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது. அஸ்வின் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

துவக்க வீரர்கள்

துவக்க வீரர்கள்

இதே பயிற்சிப் போட்டியில் இந்திய அணியில் மயங்க் அகர்வாலுடன் துவக்க வீரராக களமிறங்க உள்ள இரண்டாவது துவக்க வீரர் யார் என்பதும் முடிவு செய்யப்பட உள்ளது. ப்ரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் இடையே அணியில் இடம்பெற போட்டி நிலவுகிறது.

இந்திய உத்தேச அணி

இந்திய உத்தேச அணி

டெஸ்ட் தொடருக்கான இந்திய உத்தேச அணி - விராட் கோலி, மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, புஜாரா, அஜின்க்யா ரஹானே, விரிதிமான் சாஹா, ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், அஸ்வின், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி, ஷுப்மன் கில்

Story first published: Thursday, February 13, 2020, 17:46 [IST]
Other articles published on Feb 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+