Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: என் பேச்சை ஜடேஜா கேட்கல.. கோலியை பார்த்தாவது கற்க வேண்டும்.. அஸ்வின் கருத்து

சென்னை: ரவீந்திர ஜடேஜா தனது வெள்ளைப்பந்து கிரிக்கெட் வாழ்க்கையை மேம்படுத்த விராட் கோலியைப் போல தனது ஆட்டத்தில் புதுமைகளைப் புகுத்த வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், ஜடேஜா புதிய விஷயங்களை முயற்சி செய்ய வேண்டும் என்று தான் எப்போதும் கூறி வருவதாகவும், ஆனால் தனது பந்துவீச்சு பாணியை அவர் கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக ஜடேஜா கண்ட வெற்றியே இந்த பிடிவாதத்திற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து பேசிய அஸ்வின், "ஜடேஜாவுக்கு அவர் நம்பும் சில பலங்கள் உள்ளன. அவர் தனது பலங்களுக்கு அப்பாற்பட்டு எதையும் செய்ய மாட்டார். நீங்கள் அவரை மெதுவாக அல்லது வேறு விதமாகப் பந்துவீச எதிர்பார்த்தால், அது நடக்காது. ஏனென்றால், ஜடேஜா தனது பலங்களுக்குள்ளும் வரம்புகளுக்குள்ளும் மட்டுமே செயல்படுவார்."

ஒரு நண்பராக, ஜடேஜாவிற்கு தனது ஆலோசனையை வழங்கிய அஸ்வின், "'நீங்கள் வித்தியாசமாக எதையாவது முயற்சி செய்தால் என்ன நடக்கும்? பிஷன் சிங் பேடி, மனிந்தர் சிங் அல்லது மிட்செல் சான்ட்னர் போல பந்துவீச முயன்றால் என்ன ஆகும்? நீங்கள் சிறப்பாகச் செயல்படாமல் போகலாம், தோல்வியடையலாம், ஏன் அணியிலிருந்து நீக்கப்படலாம். ஆனால் நீங்கள் பிடிவாதமாக இருந்து தோற்றாலும் நீக்கப்படலாம்."

"புதுமையாக எதையாவது முயற்சி செய்து தோற்றால், அவர்கள் உங்களை நீக்குவார்கள். ஆனால், நீங்கள் புதிய ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் சிறப்பாகச் செயல்பட்டால் என்னவாகும்? எனவே, எதிர்மறையாக நடக்கும் என்று மிகைப்படுத்தி சிந்திப்பதற்குப் பதிலாக, நேர்மறையாகச் சிந்தியுங்கள். ஜடேஜா யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவர் ஒரு சிங்கம், அவர் ஒரு ராஜா'" என்று கூறினார்.

பயிற்சியில் ஜடேஜா கார்ரம் பால் போன்ற பல புதிய விஷயங்களை முயற்சிப்பார் என்றும், ஆனால் சர்வதேசப் போட்டிகளில் அழுத்தமான சூழ்நிலைகளில் அவற்றை அரிதாகவே பயன்படுத்துவார் என்றும் அஸ்வின் சுட்டிக்காட்டினார்.மிகுந்த அழுத்தம் இருந்தபோதிலும், "எந்தவித கவலையும் இல்லாமல் விளையாடியதுதான்" விராட் கோலிக்கு 2027 உலகக் கோப்பைக்கான தனது வாய்ப்பை மேலும் வலுப்படுத்த உதவியதாக குறிப்பிட்ட அஸ்வின், ஜடேஜாவும் அதே காலகட்டத்தில் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா ஒரு விக்கெட் கூட எடுக்கத் தவறியதுடன், பேட்டிங்கிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யவில்லை. இது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அவரது காலம் முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்விளை எழுப்பியுள்ளது. " அவர் மிகவும் திறமையானவர். ஆனால், உங்கள் திறனை விரிவாக்குவது கடினம், ஏனெனில் நீங்கள் இவ்வளவு காலமாக உங்கள் பலங்களை மட்டுமே சார்ந்து இருந்துள்ளீர்கள்."

"நீங்கள் அதை விட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் விளையாடினால், அது தானாகவே வரும். விராட் கோலி இப்போது என்ன செய்கிறார் என்று பாருங்கள். அவர் எந்தவித கவலையும் இல்லாமல் விளையாடுகிறார், தனது உலகத்தின் அரசனாக விளையாடுகிறார். அதனால்தான் அவர் இப்படிச் சிறப்பாகச் செயல்படுகிறார்," என்று அஸ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, January 20, 2026, 15:40 [IST]
Other articles published on Jan 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+