IND vs NZ 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற இதுதான் ஒரே வழி.. என்ன செய்ய வேண்டும்?
புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸிலும் நியூசிலாந்து அணி ரன் குவித்து வருகிறது. இதுவரை 301 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 156 ரன்களும் எடுத்தன. முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் இதுவரை 198 ரன்கள் எடுத்து இருக்கிறது. இன்னும் ஐந்து விக்கெட்கள் மீதம் உள்ள நிலையில் மூன்றாம் நாள் அன்றும் நியூசிலாந்து அணி ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியா அணிக்கு 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளது உறுதியாகிவிட்டது. அதை எட்டினால் மட்டுமே இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற முடியும். இந்திய மண்ணில் இதற்கு முன் 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை டெஸ்ட் போட்டியில் எட்டிய நிகழ்வு ஒரு முறை மட்டுமே நடந்துள்ளது.
2008 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 387 ரன்கள் என்ற இலக்கை எட்டி சாதனை வெற்றியை பெற்று இருந்தது. அதன் பின் 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை எட்டிய நிகழ்வு இரண்டு முறை மட்டுமே நடந்து இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் இந்திய அணி நான்காவது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை எட்டுவது மிகவும் கடினமான ஒன்று.
மேலும், புனே மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது. மூன்றாவது நாள் மற்றும் நான்காவது நாள் அன்று இந்தியா பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். அப்போது பிட்ச் அதிக அளவில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதை சமாளித்து இந்திய அணி ரன் குவிக்க வேண்டும். நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து 100 ரன்களுக்கும் மேல் ரன் குவிக்க வேண்டும்.
இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டு, மிகப்பெரிய கூட்டணிகளை அமைத்தால் மட்டுமே 350க்கும் மேற்பட்ட இலக்கை எட்டி வெற்றி பெற முடியும். அதற்கு முன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் கூடுதலாக 50 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆல் அவுட் செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் இந்திய அணிக்கு 350 ரன்களை ஒட்டிய இலக்கு நிர்ணயிக்கப்படும். ஒருவேளை நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன் சேர்த்து 400 ரன்களுக்கும் மேல் வெற்றி இலக்கை நிர்ணயித்தால் அதை எட்டுவது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications