Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகின் No-1 அணியை போராட வைத்தோம்.. பெருமையாக இருக்கு நியூசிலாந்து கேப்டன் பிரஸ்வெல்

வதோரா: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. 301 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி போராடி 49 வது ஓவர் இறுதியில் வென்றது.

இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பின்பு நியூசிலாந்து அணி தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதன் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் 2023 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி தொடர்ந்து எட்டு போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக வென்று இருக்கிறது.

Ind vs NZ

இந்தப் போட்டியில் பல அனுபவம் இல்லாத வீரர்கள் இந்தியாவில் முதன்முறையாக களம் இறங்கி இருக்கின்றனர். இது நியூசிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல், எங்களுடைய செயல்பாட்டை நினைத்து நாங்கள் பெருமை கொள்கின்றோம்.

நம்பர் 1 அணியை கடைசி ஓவர் வரை போராட வைத்தது நிச்சயம் எங்களுடைய திறனையும், செயல் பாடுகளையும் காட்டுகிறது. நாங்கள் கூடுதலாக ஒரு இருபது, முப்பது ரன்கள் அடித்திருந்தால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். அதுதான் இந்த போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திருக்கின்றது. கெயில் ஜெமிசன் போன்ற வீரர் ஒரு 15 ஓவர் வீசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் பத்து ஓவருகளுக்கு மேல் யாரும் வீச முடியாது. எங்கள் அணியில் பல திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருக்கின்றன. அனுபவம் வாய்ந்த வீரர்களும் உள்ளனர். டாரல் மிட்செல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து இருக்கின்றார். போட்டியையே மாற்றக்கூடிய சில நிகழ்வுகள் களத்தில் நடக்கும். அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் ஆட்டத்தின் முடிவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இதை பற்றி நாங்கள் அணி கூட்டத்தில் விவாதிப்போம் என்று மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, January 12, 2026, 7:30 [IST]
Other articles published on Jan 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+