Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - நியூசிலாந்து போட்டியில் ரிஷப் பண்ட் ஆடுவது நல்லதா.. கெட்டதா? சிக்கலை ஏற்படுத்திய ரோஹித்

துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு ஒரு சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பதால், அவருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அவரை சேர்த்தால் பேட்டிங் வரிசையில் குழப்பம் ஏற்படலாம்.

இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாத நிலையில், இந்திய அணி வட்டாரத்திலிருந்து சில தகவல்கள் கசிந்துள்ளன. ஒருவேளை ரோஹித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை என்றால், அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் விளையாடுவது உறுதி எனக் கூறப்படுகிறது.

IND vs NZ Rishabh Pant Champions Trophy 2025 India 2025

ரிஷப் பண்ட் இந்திய அணியில் மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமே இருக்கிறார். கே.எல்.ராகுல் முதன்மை விக்கெட் கீப்பராக இருக்கிறார். எனவே, ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இடம் பெற்றாலும் விக்கெட் கீப்பிங் பணியை செய்வதற்கான வாய்ப்பு இல்லை. பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் இடம் பெறுவார். அப்படி ஆடினால் அவர் பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறங்குவார்?

நிச்சயமாக ரிஷப் பண்ட் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்புள்ளது. தற்போது, அக்சர் பட்டேல் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்து வருகிறார். அக்சர் பட்டேல் இடது கை பேட்ஸ்மேன் என்பதாலேயே ஐந்தாம் வரிசையில் களம் இறக்கப்பட்டு வருகிறார். அணியில் வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தால் அக்சர் பட்டேலை ஐந்தாம் வரிசையில் ஆட வைத்திருக்கிறார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்.

ரிஷப் பண்ட் நான்காம் வரிசையிலும் ஆடக் கூடியவர் தான். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் நான்காம் வரிசையில் சிறப்பாக ஆடி வருகிறார். அந்த இடத்தில் இருந்து அவரை மாற்றினால் அது இந்திய அணிக்கு பாதகமாகவே முடியும். தற்போது ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பினால், அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் ஐந்தாம் வரிசையில் களம் இறங்குவார். அப்போது, அக்சர் பட்டேல் ஏழாம் வரிசைக்கு தள்ளப்படுவார். ஏனெனில், ஆறாம் வரிசையில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்வார்.

ரிஷப் பண்ட் அணிக்கு வந்த பின் இந்திய அணியின் பேட்டிங் வரிசை இப்படித்தான் இருக்கும்:

சுப்மன் கில், கே.எல்.ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ்.

Story first published: Friday, February 28, 2025, 16:14 [IST]
Other articles published on Feb 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+