Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: வருண் சக்கரவர்த்தி மாபெரும் சாதனை.. 2வது ODI போட்டியிலேயே ரெக்கார்டை உடைத்த ஸ்பின்னர்

துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி பல்வேறு சாதனைகளையும் படைத்து அசத்தி இருக்கிறார். இது அவரது இரண்டாவது ஒருநாள் போட்டி ஆகும். இதற்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே வருண் சக்கரவர்த்தி வாய்ப்பு பெற்று இருந்தார். அதுவே அவரது அறிமுக ஒருநாள் போட்டியாக இருந்தது.

அதன்பின் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பெற்று மாற்று வீரராக இருந்தார் வருண் சக்கரவர்த்தி. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி குரூப் சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணியில் அதிரடியாக நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வருண் சக்கரவர்த்தி நான்காவது சுழற்பந்துவீச்சாளராக அணியில் இடம் பிடித்தார். வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு, அவரது இடத்தில் வருண் சக்கரவர்த்தி விளையாடினார்.

IND vs NZ Varun Chakravarthy Champions Trophy 2025 India 2025

இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 249 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து நியூசிலாந்து அணி சேசிங் செய்தது. அப்போது வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் பத்து ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.

இதுவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது அறிமுக போட்டியில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பவுலிங் செயல்பாடாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய வீரர்களின் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரவீந்திர ஜடேஜா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 36 ரன்கள் விட்டுக் கொடுத்த ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய வீரர்களில் சிறந்த பந்துவீச்சாக உள்ளது.

தனது இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதுவே ஒரு இந்திய பந்துவீச்சாளர் ஒரு நாள் போட்டிகளில் மிக விரைவாக தனது முதல் ஐந்து விக்கெட் ஹாலினை வீழ்த்திய சாதனையாகும்.

இதற்கு முன் ஸ்டுவர்ட் பின்னி தனது மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக 4 ரன்கள் விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். வருண் சக்கரவர்த்தி இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Monday, March 3, 2025, 8:38 [IST]
Other articles published on Mar 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+