For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ: மாபெரும் வரலாற்று சாதனை செய்யப் போகும் விராட் கோலி.. மொத்தம் 7 ரெக்கார்டு

துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள போட்டியில் விராட் கோலி ஏழு சாதனைகளை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அவை என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்தது. ஆனால் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்து இருக்கிறார். இதை அடுத்து அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அடுத்து நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்தால் என்னென்ன சாதனைகளை செய்வார் என்று பார்க்கலாம்.

IND vs NZ Champions Trophy 2025 Virat Kohli 2025

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக ஷிகர் தவான் இருக்கிறார். அவரது சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு 52 ரன்கள் மட்டுமே தேவை. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கோலி 52 ரன்கள் அடித்தால் ஷிகர் தவானின் சாதனையை முறியடிப்பார்.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

ஷிகர் தவான் - 10 போட்டிகள், 701 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 125
சவுரவ் கங்குலி - 13 போட்டிகள், 665 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 141*
விராட் கோலி - 15 போட்டிகள், 651 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 100*
ராகுல் டிராவிட் - 19 போட்டிகள், 627 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 76
ரோஹித் சர்மா - 12 போட்டிகள், 542 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 123*

அதேபோல சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை சர்வதேச அளவில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி ஏழாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் இருக்கும் கிறிஸ் கெய்ல் 791 ரன்கள் அடித்திருக்கிறார். அவரை முந்துவதற்கு 142 ரன்கள் தேவை.

சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) - 17 போட்டிகள், 791 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 133*
மஹேல ஜெயவர்தனே (இலங்கை) - 22 போட்டிகள், 742 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 84*
ஷிகர் தவான் (இந்தியா) - 10 போட்டிகள், 701 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 125
குமார் சங்ககாரா (இலங்கை) - 22 போட்டிகள், 683 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 134*
சவுரவ் கங்குலி (இந்தியா) - 13 போட்டிகள், 665 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 141*
ஜாக்கஸ் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 17 போட்டிகள், 653 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 113*
விராட் கோலி (இந்தியா) - 15 போட்டிகள், 651 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 100*

ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 42 ஒருநாள் போட்டிகளில் 1750 ரன்கள் அடித்திருக்கிறார். விராட் கோலி தற்போது 31 போட்டிகளில் 1645 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 106 ரன்கள் அடித்தால் சச்சின் சாதனையை அவர் முறியடிப்பார்.

நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்:

சச்சின் டெண்டுல்கர் - 42 போட்டிகள், 1750 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 186*
விராட் கோலி - 31 போட்டிகள், 1645 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 154*
வீரேந்தர் சேவாக் - 23 போட்டிகள், 1157 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 123
முகமது அசாருதீன் - 40 போட்டிகள், 1118 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 108*
சவுரவ் கங்குலி - 32 போட்டிகள், 1079 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 153*

நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் வீரேந்திர சேவாக், ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் விராட் கோலி தற்போது முதல் இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இவர்கள் மூவரும் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஆறு சதங்கள் அடித்துள்ளனர். தற்போது விராட் கோலி ஒரு சதம் அடித்தால் அவர்களை முந்தி முதலிடத்தை தனியாக பிடிப்பார்.

நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள்:

வீரேந்தர் சேவாக் (இந்தியா) - 23 போட்டிகள், 1157 ரன்கள், 6 சதங்கள்
விராட் கோலி (இந்தியா) - 32 போட்டிகள், 1645 ரன்கள், 6 சதங்கள்
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 51 போட்டிகள், 1971 ரன்கள், 6 சதங்கள்
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 42 போட்டிகள், 1750 ரன்கள், 5 சதங்கள்
சனத் ஜெயசூர்யா (இலங்கை) - 47 போட்டிகள், 1519 ரன்கள், 5 சதங்கள்

சாம்பியன்ஸ் டிராபிகளில் விராட் கோலி இதுவரை ஆறு முறை 50 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் ஒரு முறை அவர் 50 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை அடித்தால் ஷிகர் தவான், சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரை முந்தி முதலிடத்தை பிடிப்பார்.

சாம்பியன்ஸ் டிராபியில் அதிக 50+ ஸ்கோர்கள் எடுத்த வீரர்கள்:

ஷிகர் தவான் (இந்தியா) - 10 போட்டிகள், 701 ரன்கள், 6 அரைசதங்கள்
சவுரவ் கங்குலி (இந்தியா) - 13 போட்டிகள், 665 ரன்கள், 6 அரைசதங்கள்
விராட் கோலி (இந்தியா) - 15 போட்டிகள், 651 ரன்கள், 6 அரைசதங்கள்
ராகுல் டிராவிட் (இந்தியா) - 19 போட்டிகள், 627 ரன்கள், 6 அரைசதங்கள்

ஒருநாள் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருக்கும் குமார் சங்கக்காராவை முந்துவதற்கு அவர் 150 ரன்கள் எடுக்க வேண்டும்.

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்:

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 463 போட்டிகள், 18,426 ரன்கள்
குமார் சங்ககாரா (இலங்கை) - 404 போட்டிகள், 14,234 ரன்கள்
விராட் கோலி (இந்தியா) - 299 போட்டிகள், 14,085 ரன்கள்
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 375 போட்டிகள், 13,704 ரன்கள்
சனத் ஜெயசூர்யா (இலங்கை) - 445 போட்டிகள், 13,430 ரன்கள்

மேலும் விராட் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தால், சச்சின் டெண்டுல்கரை விட ஒரு தனிப்பட்ட கிரிக்கெட் வடிவத்தில் மட்டும் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 51 சதம், ஒருநாள் போட்டியில் 49 சதங்கள் அடித்திருக்கிறார்.

தற்போது விராட் கோலி ஒருநாள் போட்டியில் 51 சதங்கள் அடித்து அதிக ஒருநாள் போட்டி சதங்களை அடித்து இருக்கிறார். அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் சதம் அடித்தால் அது 52 ஆவது சதமாகும். அதன் மூலம் ஒரு கிரிக்கெட் வடிவத்தில் மட்டும் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் டெஸ்ட் சாதனையை, கோலி ஒருநாள் போட்டிகளின் மூலம் முறியடிப்பார்.

Story first published: Saturday, March 1, 2025, 12:44 [IST]
Other articles published on Mar 1, 2025
English summary
IND vs NZ Champions Trophy 2025: Virat Kohli Eyes 8 Records in India vs New Zealand Champions Trophy Clash
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+