Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுவரை இப்படி நடந்து நான் பார்த்ததே இல்லை.. இந்திய அணியை குத்திக் காட்டிய முன்னாள் வீரர்!

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா படு மோசமாக செயல்பட்டு, தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டி குறித்து பேசிய முன்னாள் நியூசிலாந்து வீரர் கிரேக் மெக்மில்லன், உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்திய அணியை, நியூசிலாந்து அணி நான்கு நாட்கள் இதுவரை இல்லாத அளவு பிரித்து மேய்ந்து விட்டதாக கூறி உள்ளார்.

இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி நியூசிலாந்து வெற்றியை கொண்டாடி இருக்கிறார் இவர்.

நம்பர் 1 டெஸ்ட் அணி

நம்பர் 1 டெஸ்ட் அணி

இந்திய அணி உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக தரவரிசையில் நீண்ட நாட்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி வெளிநாடுகளில் தடுமாறி வருகிறது. முக்கிய வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலியா, மற்றும் பலம் குறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிகளை மட்டுமே இந்தியா கடந்த சில ஆண்டுகளில் டெஸ்ட் தொடரில் வென்றுள்ளது.

முதல் டெஸ்ட் தோல்வி

முதல் டெஸ்ட் தோல்வி

நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸிலும் இந்திய அணியால் 200 ரன்களை தாண்ட முடியவில்லை.

நியூசிலாந்து பவுலிங் அபாரம்

நியூசிலாந்து பவுலிங் அபாரம்

நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இந்திய பேட்ஸ்மேன்களில் ரஹானே, மயங்க் அகர்வால் தவிர யாராலும் அதை எதிர்த்து ரன் எடுக்க முடியவில்லை. டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, கைல் ஜேமிசன் என மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் விக்கெட் வேட்டை நடத்தினர்.

கைவிட்ட கோலி, புஜாரா

கைவிட்ட கோலி, புஜாரா

இந்திய வீரர்களின் புஜாரா, கோலி அணியை காப்பாற்றுவார்கள் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இருவரும் பேட்டிங்கில் தவறான உத்திகளை கடைப் பிடித்து விக்கெட்டை பறி கொடுத்தனர். கோலி 2 மற்றும் 19 ரன்களே எடுத்தது பெரும் அதிர்ச்சி அளித்தது.

பேட்டிங் தவறு

பேட்டிங் தவறு

இந்திய அணி பேட்டிங் செய்த போது அவுட் சைடு ஆஃப் திசையில் வந்த பந்துகளையும், பவுன்ஸ் ஆகி வந்த பந்துகளையும் அடிக்க முற்பட்டு விக்கெட்களை இழந்தது. புஜாரா, விராட் கோலி ஆகியோரும் இதே பாணியில் தான் ஆட்டமிழந்தனர்.

மெக்மில்லன் கருத்து

மெக்மில்லன் கருத்து

இந்த நிலையில், முன்னாள் நியூசிலாந்து வீரர் கிரேக் மெக்மில்லன் இந்திய அணியின் பேட்டிங் உத்தி தவறாக போனது பற்றியும், நியூசிலாந்து அணி செலுத்திய ஆதிக்கத்தை பாராட்டியும் பேசி உள்ளார். மேலும், நம்பர் 1 அணியை வீழ்த்தியது பற்றியும் பெருமை கொண்டுள்ளார்.

பேட்டிங் உத்தி

பேட்டிங் உத்தி

இந்திய அணியின் பேட்டிங் பற்றி பேசிய அவர், "அவர்கள் தாங்கள் ஆடும் விதத்தில் எந்த மாற்றத்தையும் செய்து கொள்ளவில்லை. இந்தியாவில் தங்கள் கைகளை பந்திடம் எறிவது போல ஆடினார்கள். பந்து முட்டிக்கு மேலே பவுன்ஸ் ஆகாத போது நீங்கள் அப்படி ஆடலாம். ஆனால், நியூசிலாந்தில் அப்படி செய்யக் கூடாது" என குறிப்பிட்டு சுட்டிக் காட்டினார்.

பவுல்ட், சவுதி அபாரம்

பவுல்ட், சவுதி அபாரம்

"பந்து ஸ்விங் ஆகும் போது டிம் சவுதி மற்றும் ட்ரென்ட் பவுல்ட் அதில் ஜீனியஸ்கள். வெல்லிங்க்டன் டெஸ்ட் போட்டியில் பெரும்பாலான நேரம் பந்து ஸ்விங் ஆனது" என நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை புகழ்ந்து பேசினார் மெக்மில்லன். சவுதி இந்தப் போட்டியில் 9 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

பிரிக்கப்பட்ட இந்திய அணி

பிரிக்கப்பட்ட இந்திய அணி

"உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியா வெல்லிங்க்டனில் நான்கு நாட்களும் பிரித்து மேயப்பட்டது போல நான் இதுவரை பார்த்ததே இல்லை. டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து, நம்பர் 1 அணியை வீழ்த்துவது அரிது" எனப் பாராட்டினார் மெக்மில்லன்.

பெரிய வெற்றிகள்

பெரிய வெற்றிகள்

இந்தியா கடந்த ஏழு டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்று இருந்தது. அவை அனைத்துமே பெரிய வெற்றிகள் ஆகும். அப்படி பெரிய வெற்றிகள் பெற்ற அணியை நியூசிலாந்து அணி வீழ்த்தி உள்ளதை குறிப்பிட்டு இது இன்னும் முக்கியமானது என்றார் அவர்.

Story first published: Wednesday, February 26, 2020, 17:48 [IST]
Other articles published on Feb 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+