Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படியாவது அந்த மேஜிக் நம்பரை தொடணும்.. அப்ப தான் இந்தியா ஜெயிக்க முடியும்! #INDvsNZ

Recommended Video

WORLD CUP 2019 IND VS NZ | இந்தியா வெற்றி பெறுவதற்கு இந்த வழி சிறந்தது

மான்செஸ்டர் : அரையிறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட ரன்கள் எடுத்தால் தான் இந்தியா எளிதாக வெற்றி பெறலாம்.

2019 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில், ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த மைதானத்தில் எளிதாக ரன் குவிக்கலாம். ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்காது.

மேஜிக் நம்பர்

மேஜிக் நம்பர்

இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்யும் அணி 300 ரன்களை குவிக்க வேண்டியது முக்கியம். அது தான் இந்தப் போட்டியின் மேஜிக் நம்பர். இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் அந்த மேஜிக் நம்பரை தொட்டால், நியூசிலாது அணியை எளிதாக வீழ்த்தலாம்.

நியூசி. அணியை சுருட்ட வேண்டும்

நியூசி. அணியை சுருட்ட வேண்டும்

ஒருவேளை நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால், அந்த அணியை 250 முதல் 270 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். அப்போது சேஸிங் எட்டக் கூடியதாக இருக்கும். ஆனால், இந்திய அணிக்கு இந்த மைதானத்தில் ஒரு சிக்கல் உள்ளது.

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

இந்த உலகக்கோப்பை தொடரில் மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா இரண்டு போட்டிகளில் விளையாடியது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 336 ரன்கள் குவித்தது. இதற்கு முக்கிய காரணம், டாப் ஆர்டர் ரன் குவித்தது தான்.

வெஸ்ட் இண்டீஸ் போட்டி

வெஸ்ட் இண்டீஸ் போட்டி

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 268 ரன்களே எடுத்தது. இதற்கு முக்கிய காரணம், டாப் ஆர்டர் ஆட்டமிழந்த பின், மிடில் ஆர்டர் மிக மோசமாக் சொதப்பியது தான்.

டாப் ஆர்டர்

டாப் ஆர்டர்

அது போன்ற நிலை அரையிறுதிப் போட்டியிலும் ஏற்படலாம். இந்திய அணியின் மிடில் ஆர்டர் சற்று பலவீனமாக இருக்கும் நிலையில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய மூவரும் விக்கெட் இழக்காமல் குறைந்தது 40 ஓவர்கள் வரையாவது தாக்குப் பிடித்து ஆட வேண்டும்.

நியூசிலாந்து பார்ம் அவுட்

நியூசிலாந்து பார்ம் அவுட்

ஒருவேளை நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தால், அந்த அணியை இந்தியா எளிதாக 250 ரன்களுக்குள் சுருட்ட முடியும், அந்த அளவிற்கு அந்த அணியின் பேட்டிங் வரிசை பார்ம் அவுட் ஆகி உள்ளது. நியூசிலாந்து அணி மேஜிக் நம்பரை தொட்டு விட்டால் இந்தியா சேஸிங் செய்வது கடினம் தான்.

Story first published: Tuesday, July 9, 2019, 11:53 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+