For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா கூட மேட்ச் ஆடினா கூட்டம் வரும்.. நியூசி.க்கு வித்தியாசமான வார்னிங் கொடுத்த வெட்டோரி!

Recommended Video

WORLD CUP 2019 IND VS NZ | நியூசி.க்கு வித்தியாசமான எச்சரிக்கை கொடுத்த வெட்டோரி!

நாட்டிங்ஹாம் : நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி அந்த அணிக்கு வித்தியாசமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று உலகக்கோப்பை லீக் போட்டியில் மோத உள்ளன. உலகக்கோப்பை தொடரில் இதுவாய் தோல்வியே சந்திக்காத இந்த இரண்டு அணிகளும் மோத உள்ளதால், இந்தப் போட்டிக்கு பரபரப்பு கூடியுள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்த நிலையில் இந்திய அணியை வீழ்த்த யோசனை கூறிய டேனியல் வெட்டோரி, இந்திய ரசிகர்களை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது எண்ணப்படி, இந்தியா - நியூசிலாந்து போட்டியில் நியூசிலாந்து எளிதாக வெல்லும் என்கிறார்.

நியூசிலாந்து வெற்றிகள்

நியூசிலாந்து வெற்றிகள்

உலகக்கோப்பை தொடரில் தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், பயிற்சிப் போட்டியில் இந்திய அணியை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. அதனால், லீக் சுற்றிலும் இந்தியாவை அந்த அணி எளிதாக வெல்லும் என்பது அவரது எண்ணமாக உள்ளது.

ஹவுஸ்ஃபுல்

ஹவுஸ்ஃபுல்

ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அழுத்தக் கொடுக்கப் போவது இந்திய ரசிகர்கள் தான் என்கிறார். காரணம், இந்தியா ஆடும் போட்டிகளுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் வரும். மைதானம் "ஹவுஸ்ஃபுல்" ஆகி விடும்.

அழுத்தம் கொடுக்கும்

அழுத்தம் கொடுக்கும்

எங்கு பார்த்தாலும் இந்திய ரசிகர்கள் தான் இருப்பார்கள். அது உண்மையில் எதிரணிக்கு பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கும். சில நியூசிலாந்து வீரர்கள் ஏற்கனவே, இந்தியாவில் விளையாடிய அனுபவம் பெற்று இருந்தாலும், புதிய இளம் வீரர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

பழக வேண்டும்

பழக வேண்டும்

இதை பழகிக் கொண்டால் தான் நியூசிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்த முடியும். மேலும், அரையிறுதி, இறுதிப் போட்டிக்கும் அதிக அளவில் கூட்டம் வரும் என்பதால், அதற்கும் இது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார் வெட்டோரி.

அங்கே கூட்டம் வராது

அங்கே கூட்டம் வராது

நியூசிலாந்து நாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு பெரிய அளவில் கூட்டம் வராது. அந்த நாட்டின் மைதானங்களில் இருக்கைகளின் எண்ணிக்கை கூட மிகக் குறைவாகத் தான் இருக்கும். அதனால், ஓரளவு அமைதியான சூழலில் தான் அவர்கள் கிரிக்கெட் ஆடி இருப்பார்கள்.

திருவிழா

திருவிழா

ஆனால், இந்திய ரசிகர்கள் மைதானத்தில் இருந்தால் அது திருவிழா போல இருக்கும். பாட்டும், இசையும் என கோலாகலமாக இருக்கும். அதைத் தான் கூறி தங்கள் நாட்டு இளம் வீரர்களுக்கு முன்யோசனை கூறியுள்ளார் டேனியல் வெட்டோரி.

Story first published: Thursday, June 13, 2019, 14:16 [IST]
Other articles published on Jun 13, 2019
English summary
IND vs NZ Cricket World cup 2019 : Daniel Vettori on Indian fans support
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X