For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி ரன் அவுட்டே இல்லை.. தவறான தீர்ப்பு.. கதறும் ரசிகர்கள்.. உண்மை என்ன?

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ : DHONI RUN OUT | தோனி ரன் அவுட்டே இல்லை! கதறும் ரசிகர்கள்! உண்மை என்ன?

மான்செஸ்டர் : உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனியின் ரன் அவுட் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பலரும் தோனி அவுட் இல்லை என கூறி வருகிறார்கள். ஆனால், விதிப்படி அவுட் தான் என சிலர் விளக்கம் கூறி வருகிறார்கள்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் ஜடேஜா, தோனி மட்டுமே பொறுப்பாக பேட்டிங் செய்தனர்.

போட்டியில் பரபரப்பு

போட்டியில் பரபரப்பு

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 239 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த இந்திய அணி 5 ரன்களுக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுலை இழந்தது. பின்னர் மிடில் ஆர்டரும் சொதப்ப, கடைசி நேரத்தில் தோனி, ஜடேஜா கூட்டணி அமைத்து அணியை மீட்டனர். ஜடேஜா 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

தோனி மட்டுமே நம்பிக்கை

தோனி மட்டுமே நம்பிக்கை

கடைசியில் தோனி மட்டுமே அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்தார். 12 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் 49வது ஓவரை எதிர்கொண்டு ஆடினார் தோனி. முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார். மூன்றாவது பந்தில் இரண்டு ரன் ஓட முயன்றார்.

ரன் அவுட்

ரன் அவுட்

தோனி ஒரு ரன் ஓடி முடித்து, இரண்டாம் ரன் ஓடி வரும் போது, மார்டின் குப்டில்-இன் அருமையான த்ரோவால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். தோனி அவுட் ஆன உடன் இந்திய அணியின் வெற்றிக் கனவு தகர்க்கப்பட்டது.

ஆறு பீல்டர்கள்

இந்த நிலையில், இணையத்தில் வெளியான சில புகைப்படங்கள், வீடியோக்களால் தோனி ரன் அவுட்டில் பெரும் சர்ச்சை வெடித்தது. தோனி ஆட்டமிழந்த பந்தை வீசும் போது நியூசிலாந்து அணியின் ஆறு பீல்டர்கள் உள்வட்டத்துக்கு வெளியே நின்று இருந்தார்கள்.

விதி என்ன?

விதிப்படி ஐந்து பீல்டர் தான் அதிகபட்சம் உள்வட்டத்துக்கு வெளியே நிற்க வேண்டும். ஆனால், நியூசிலாந்து அணியில் ஆறு பீல்டர்கள் வெளியே நின்று இருந்தனர். எனவே, இது நோ பால் ஆகும். அதனால், பல ரசிகர்கள் தோனி நோ பாலில் ரன் அவுட் செய்யப்பட்டார் என கூறி வருகிறார்கள்.

தோனி அவுட்டா?

தோனி அவுட்டா?

ஆனால், நோ பாலில் ரன் அவுட் செய்யப்பட்டாலும் அவுட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தோனி அவுட் என்ற தீர்ப்பில் சிக்கல் இல்லை. ஆனால், அது நோ பால். இதில் ஒரு விஷயம் உள்ளது. ஒரு வேளை சரியான பீல்டிங் நிறுத்தப்பட்டு இருந்தால், தோனி அடித்த பந்தை பிடித்தது, ரன் அவுட் செய்தது போன்ற சம்பவங்கள் நடக்காமல் போயிருக்கலாம்.

Story first published: Thursday, July 11, 2019, 10:11 [IST]
Other articles published on Jul 11, 2019
English summary
IND vs NZ Cricket World cup 2019 : Dhoni run out controversy explained. What is the rule for
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+