பவர்பிளேவில் இந்திய பேட்டிங்கை சிதைத்து.. அதே போட்டியில் பழிக்குப் பழி வாங்கிய நியூசி.!
Recommended Video
மான்செஸ்டர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பவர்பிளே ஓவர்களில் மிக மோசமான சாதனையை செய்தது.
முன்பு நியூசிலாந்து அணியை முதல் இன்னிங்க்ஸில் காய்ச்சி எடுத்த இந்தியா, அந்த அணியை மோசமான சாதனையை செய்ய வைத்தது.
இந்த நிலையில், அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி அவர்கள் செய்த அந்த மோசமான சாதனையை முறியடித்து, படு மோசமான சாதனையை செய்தது.

மந்தமான பேட்டிங்
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிய போது மிகவும் மந்தமாக ரன் சேர்த்தது. முதல் நான்கு ஓவர்களில் பந்தை தொடவே அஞ்சினர் அந்த அணியின் துவக்க வீரர்கள். மார்டின் குப்டில் 14 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

பவர்பிளே ரெக்கார்டு
நியூசிலாந்து 10 ஓவர்கள் பவர்பிளேவின் முடிவில் 1 விக்கெட் இழந்து 27 ரன்கள் மட்டுமே எடுத்தது. 2019 உலகக்கோப்பை தொடரில் இது தான் மோசமான பவர்பிளே ஸ்கோர். இந்திய ரசிகர்கள் இதை கிண்டல் செய்து வந்தனர்.

சேஸிங் எப்படி?
அடுத்து நியூசிலாந்து அணி 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவிற்கு இதெல்லாம் ஜூஜூபி என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரும் அதிர்ச்சி அளித்தனர்.

மூவர் விக்கெட்
ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ராகுல் என மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்கள் இழந்தது.

தினேஷ் கார்த்திக் சொதப்பல்
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்டுடன் சேர்ந்து "டொக்கு" வைத்துக் கொண்டு இருந்தார். எல்லை மீறிச் சென்ற "டொக்கு"களால், இந்தியாவின் ஸ்கோர் உயர முடியாமல் தடுமாறியது. சரியாக பத்தாவது ஓவரின் முடிவில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார்.

பவர்பிளே ஸ்கோர்
10 ஓவர்கள் பவர்பிளேவின் முடிவில் இந்திய அணி 24 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் இழந்து இருந்தது. நியூசிலாந்து அணியின் மோசமான பவர்பிளே சாதனையை அதே போட்டியில் முறியடித்து இந்தியா. உண்மையில், நியூசிலாந்து அணி பழிக்குப் பழி வாங்கியது. இது மட்டுமில்லாமல் போட்டியிலும், இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


Click it and Unblock the Notifications