Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மழையால் தடைபட்ட இந்தியா - நியூசி. அரையிறுதி பாதியில் ஒத்திவைப்பு.. போட்டி மீண்டும் நடக்கும்! எப்படி?

Recommended Video

இந்தியா - நியூசி. அரையிறுதி பாதியில் ஒத்திவைப்பு.. நாளை தொடரும்!

மான்செஸ்டர் : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டி மழை காரணமாக தடைபட்டது.

போட்டி நேரம் முழுவதும் மழை தொடர்ந்த நிலையில், போட்டி நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

மிரட்டல் பந்துவீச்சு

மிரட்டல் பந்துவீச்சு

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. துவக்க வீரர் மார்டின் குப்டில் 14 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பத்து ஓவர்களில் நியூசிலாந்து அணி 27 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக காட்சி அளித்தது.

வில்லியம்சன், டெய்லர் போராட்டம்

வில்லியம்சன், டெய்லர் போராட்டம்

அதன் பின் மற்றொரு துவக்க வீரர் நிக்கோல்ஸ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இணைந்து அணியை மீட்டனர். வில்லியம்சன் அரைசதம் கடந்து 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து நீஷம் 12, கிராண்ட்ஹோம் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். ராஸ் டெய்லர் அரைசதம் கடந்து தொடர்ந்து களத்தில் நின்றார்.

குறுக்கிட்டது மழை

குறுக்கிட்டது மழை

நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழந்து 211 ரன்கள் எடுத்து இருந்தது, அப்போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. இரு அணிகளும் நீண்ட நேரம் காத்திருந்தும் மழை நிற்கவில்லை.

நாளை ஒத்திவைப்பு

நாளை ஒத்திவைப்பு

இந்த நிலையில் போட்டி நாளை தொடர்ந்து நடைபெறும் என அம்பயர்கள் அறிவித்தனர், போட்டி நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விதிமுறைப் படி போட்டி எந்த இடத்தில் நிறுத்தப்பட்டதோ, அதே இடத்தில் இருந்து தொடர்ந்து நடைபெறும்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

அதன் படி, நியூசிலாந்து அணி மீதமுள்ள 47வது ஓவர் முதல் தொடங்கி 50 ஓவர்கள் வரை ஆடி முடிக்கும். அதைத் தொடர்ந்து இந்திய அணி சேஸிங் செய்யும். நாளையும் மான்செஸ்டர் நகரில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

மழையால் பாதித்த இந்திய மேட்ச்.. செமி பைனல் போட்டியில் அடுத்து என்ன நடக்கும்? - முழு விபரம் இதோ!

Story first published: Wednesday, July 10, 2019, 8:30 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+