Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித், கோலியை பாக். கேப்டன் மந்திரிச்சு விட்டுட்டாரு.. மரண கலாய் கலாய்க்கும் ரசிகர்கள்!

Recommended Video

கனவு கலைந்தது... அரையிறுதியில் தோற்று வெளியேறியது இந்தியா

மான்செஸ்டர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வேகமாக ஆட்டமிழந்து சென்றதை கண்டு இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தியா - நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி மழையால் தடைபட்டு, மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நியூசிலாந்து அணி முதல் நாளில் 46.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து இருந்தது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தொடர்ந்து மறுநாள் மீதமிருந்த ஓவர்களை சந்தித்தது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கும் என்பதால் இந்தியா எளிதாக இந்த இலக்கை அடையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் என மூன்று டாப் ஆர்டர் வீரர்களும் வெறும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 3.1 ஓவரில் இந்தியா 5 ரன்களுக்கு மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்து தினேஷ் கார்த்திக் 25 பந்துகள் சந்தித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

லாரி டயருக்கு காத்து

முக்கியமான அரையிறுதிப் போட்டியில் சொதப்பலாக ஆடி வரும் இந்திய அணியை ரசிகர்கள் மோசமாக கிண்டல் செய்தனர். அவற்றில் சில -

லாரி டயருக்கு வாயில் காத்து அடிக்கும் இந்த சிறுவனை போல இந்தியா விக்கெட் இழந்து பைனலுக்கு போக போராடுதாம். அதுக்கு வாய்ப்பே இல்லை என்கிறார்.

நீதா அம்பானி அதிர்ச்சி

ஐபிஎல் தொடரில் நீதா அம்பானி மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்த போது அதிர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு.. "3 ஓவர்களில் 3 விக்கெட்.. என்னதான் நடக்குது?" என்று கேட்கிறார்.

தோனி

இது போல இந்திய அணி விரைவில் விக்கெட்கள் இழந்து தடுமாறினால், அந்தப் போட்டிகளில் தோனி தான் கை கொடுப்பார். அதனால், இந்திய ரசிகர்கள், "தோனி தான் காப்பாத்தணும்" என்று வேண்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்கிறார்.

மந்திரிச்சு விட்டதால்..

பாகிஸ்தான் கேப்டன் மந்திரிச்சு விட்டதால் தான் ரோஹித், கோலி விரைவில் விக்கெட்டை இழந்தார்கள் என்று கலாய்த்துள்ளார் ஒருவர்.

இது கால்பந்தா?

இது கிரிக்கெட் மேட்ச்சா.. இல்லை கால்பந்தா? என்கிறார். காரணம், இந்திய அணியின் ஸ்கோர் 5 ரன்களுக்கு 3 விக்கெட் என இருந்தது. (5-3). கால்பந்து போட்டிகளில் தான் ஸ்கோர் இப்படி ஒற்றை இலக்கத்தில் இருக்கும்.

தப்புக் கணக்கு

நியூசிலாந்து அணியை எளிதாக வீழ்த்தி விடலாம் என அந்த அணியை குறைத்து மதிப்பிட்ட என் போன்றவர்களுக்கு இரண்டு நிமிடம் ஆழ்ந்த அஞ்சலி.

1 ரன் கிண்டல்

உலகின் நம்பர் 1 மற்றும் 2 பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆளுக்கு 1 ரன் அடித்து அணிக்கு ரொம்ப உதவி இருக்கிறார்கள் என குத்திக் காட்டுகிறார்.

Story first published: Wednesday, July 10, 2019, 17:26 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+