Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு கையில் என்ன ஆச்சு? பிரச்சனை இல்லாமல் இருக்கணுமே.. போட்டியில் பரபரப்பு!

Recommended Video

கோலிக்கு கையில் ஏற்பட்ட காயம்... மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு

மான்செஸ்டர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பீல்டிங் செய்தது. அப்போது கேப்டன் கோலி கையில் காயம் ஏற்பட்டது.

நியூசிலாந்து பேட்டிங் ஆடி முடித்த பின் இந்திய அணி பேட்டிங் ஆட வேண்டும். இந்த நிலையில் கோலிக்கு காயம் ஏற்பட்டதால், ரசிகர்கள் சிறிது நேரம் பதற்றம் அடைந்தார்கள்.

இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தியா அதிரடி துவக்கம்

இந்தியா அதிரடி துவக்கம்

இந்திய அணியின் பந்துவீச்சு முதல் 10 ஓவர்களுக்கு அபாரமாக இருந்ததும 10 ஓவர்களின் முடிவில் வெறும் 27 ரன்களே எடுத்து இருந்தது. குறிப்பாக முதல் நான்கு ஓவர்களில் பும்ரா - புவனேஸ்வர் குமார் ஜோடி போட்டுக் கொண்டு நியூசிலாந்து துவக்க வீரர்கள் மார்டின் குப்டில், ஹென்றி நிக்கோல்ஸ்-ஐ மிரட்டினர்.

கோலி சூப்பர் கேட்ச்

கோலி சூப்பர் கேட்ச்

பும்ரா வீசிய நான்காவது ஓவரின் மூன்றாவது பந்தில் துவக்க வீரர் மார்டின் குப்டில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். இரண்டாவது சலிப்பில் நின்று கொண்டு இருந்த கோலி அருமையாக கேட்ச் பிடித்து அசத்தினார். குப்டில் வெறும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

என்ன ஆச்சு?

என்ன ஆச்சு?

அந்த ஓவரின் முடிவில் கோலியின் விரல்களில் வலி இருந்ததால், முதல் உதவி அளிக்கப்பட்டது. ஸ்லிப்பில் கேட்ச் பிடித்த போது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டு வலி ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. கோலிக்கு என்ன ஆனது என ரசிகர்கள் சிறிது நேரம் பதற்றம் அடைந்தனர்.

பேட்டிங் செய்வாரா?

பேட்டிங் செய்வாரா?

எனினும், கோலி தொடர்ந்து பீல்டிங் செய்ததை அடுத்து ரசிகர்கள் ஆசுவாசம் அடைந்தனர். கோலிக்கு பெரிய காயம் ஏதும் இருக்காது என கருதப்படுகிறது. அதனால், நிச்சயம் இந்தப் போட்டியில் பேட்டிங் செய்வார். எனினும், அரையிறுதியில் வெற்றி பெற்றால், அடுத்து இறுதிப் போட்டியில் பங்கேற்க வேண்டும். இந்த நிலையில், கோலி மேற்கொண்டு காயம் அடையாமல் இருக்க வேண்டும்.

Story first published: Tuesday, July 9, 2019, 17:17 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+