Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படி இருந்தாரு.. இப்ப இப்படி ஆயிட்டாரு.. மார்ட்டினை நம்பி நொந்து நூடுல்ஸான நியூசிலாந்து! #INDvsNZ

Recommended Video

மார்ட்டினை நம்பி ஏமாந்த நியூசிலாந்து அணி

மான்செஸ்டர் : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து துவக்க வீரர் மார்டின் குப்டில் பெரும் ஏமாற்றம் அளித்தார்.

கடந்த காலங்களில் எதிரணிகளை கதி கலங்க வைத்த அதிரடி வீரரான மார்டின் குப்டில் 2019 உலகக்கோப்பை தொடரில் பரிதாபமான நிலையில் பேட்டிங் செய்து வருகிறார்.

அதிலும் அரையிறுதிப் போட்டியில் தன்னை நம்பிய அணியை அவர் கைவிட்டார். அவரது மோசமான செயல்பாடுகளால் நியூசிலாந்து அணி மிகவும் வேதனையில் உள்ளது.

2015 உலகக்கோப்பை அட்டகாசம்

2015 உலகக்கோப்பை அட்டகாசம்

2015 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. அந்த தொடரில் மார்டின் குப்டில் நியூசிலாந்து அணிக்காக அபாரமாக ஆடி அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அந்த உலகக்கோப்பை தொடரில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரட்டை சதம் (237 ரன்கள்) அடித்தார். மேலும், மொத்தமாக 547 ரன்கள் குவித்து ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனை செய்தார்.

2019 உலகக்கோப்பை அதிர்ச்சி

2019 உலகக்கோப்பை அதிர்ச்சி

அதே போல அதிரடி ஆட்டம் ஆடி 2019 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை வழிநடத்திச் செல்வார் என்று எதிர்பார்த்தது நியூசிலாந்து அணி. ஆனால், மோசமான பார்ம் அவுட்டில் இருக்கும் மார்டின் குப்டில் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் மட்டும் 73 ரன்கள் எடுத்தார்.

இரண்டு டக் அவுட்

இரண்டு டக் அவுட்

அதன் பின் வரிசையாக சொதப்பல் ஆட்டம் ஆடினார் குப்டில். இரண்டு போட்டிகளில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி பெரும் அதிர்ச்சி அளித்தார். மொத்தமாக ஒன்பது போட்டிகளில் 167 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்திய அணியிடம் சொதப்பல்

இந்திய அணியிடம் சொதப்பல்

இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் 14 பந்துகளை சந்தித்து வெறும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். லீக் போட்டிகளில் சரியாக ரன் குவிக்காவிட்டாலும் மூத்த வீரர், அதிரடி வீரர் என்ற அடிப்படையில் அரையிறுதியில் அவருக்கு வாய்ப்பளித்த அணியை மொத்தமாக கைவிட்டார் குப்டில்.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

நியூசிலாந்து அணி லீக் சுற்றின் கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்தது. அதற்கு முக்கிய காரணம் அந்த அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை என்பது தான். அதையும் மீறி தான் அரையிறுதிப் போட்டியில் துவக்க வீரர் குப்டில் வாய்ப்பு பெற்றார். அதில் ஏமாற்றம் அளித்தார்.

நியூசிலாந்து வேதனை

நியூசிலாந்து வேதனை

இதனால், நியூசிலாந்து அணி நிர்வாகம் வேதனையில் உள்ளது. மார்டின் குப்டிலுக்கு பதில் வேறு இளம் வீரருக்கு வாய்ப்பு அளித்து இருந்தால், ஒருவேளை நியூசிலாந்து அணியின் நிலை மாறி இருக்கலாம்.

Story first published: Tuesday, July 9, 2019, 20:42 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+