Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விக்கெட் எடுத்தாலும் ஷமிக்கு இடமில்லை.. விராட் கோலி பிடிவாதம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! #INDvsNZ

Recommended Video

World Cup 2019 : இன்றும் ஷமி அணியில் இல்லை.. என்ன காரணம்?- வீடியோ

மான்செஸ்டர் : இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் அணித் தேர்வு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

உலகக்கோப்பை தொடரில் சில போட்டிகளில் வாய்ப்பு பெற்ற ஷமி சிறப்பாக பந்து வீசினார்.

அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் அவரை புறக்கணித்து இருந்தார் கோலி. அப்போது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாகவே பலரும் நினைத்தார்கள்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஷமி களமிறங்கவில்லை. இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்திக் பண்டியா, சாஹல், ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றனர். முக்கியமான அரையிறுதிப் போட்டியில் ஷமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது .

புவனேஸ்வர் ஏன்?

புவனேஸ்வர் ஏன்?

புவனேஸ்வர் குமார் நன்றாக பந்தை ஸ்விங் செய்வார் என்ற காரணத்தால் அணியில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். எனினும், அவரால் விக்கெட் எடுக்க முடிவதில்லை. சில போட்டிகளில் புவனேஸ்வர் குமார் ரன்களை வாரி இறைத்து விடுகிறார். இதே குறை ஷமியிடமும் உள்ளது.

சரியான தேர்வு யார்?

சரியான தேர்வு யார்?

எனினும், ஷமி எதிரணியை அச்சுறுத்தி வந்தார். பல சமயம் அவர் பந்து வீசும் வேகம் 145 கிமீ.க்கும் மேல் சென்றது. இந்த வேகம் புவனேஸ்வர் குமாரிடம் இல்லை. மேலும், ஷமி பந்துவீச்சில் விரைவாக விக்கெட்கள் சரிந்தன. அதற்கு காரணம், அவரது அச்சுறுத்தும் பந்துவீச்சு. எனவே, ஷமி தான் சரியான தேர்வாக இருக்க முடியும்.

சச்சின் தேர்வு

சச்சின் தேர்வு

அரையிறுதி குறித்து கருத்து கூறிய சச்சின் கூட ஷமி நிச்சயம் அரையிறுதியில் விளையாட வேண்டும் என்றார். பல முன்னாள் வீரர்களும் அதே யோசனையை தெரிவித்து இருந்தனர். ஆனால், கேப்டன் கோலி அனைத்தையும் புறந்தள்ளி ஷமிக்கு வாய்ப்பு அளிக்க மறுத்துள்ளார்.

புறக்கணிப்பு ஏன்?

புறக்கணிப்பு ஏன்?

ஷமி அதிக ரன்களை வாரிக் கொடுத்தார் என்பது மட்டுமே தான் அவர் புறக்கணிக்கப்பட காரணம் என்பதை பல விமர்சகர்களும், ரசிகர்களும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். புவனேஸ்வர் குமார் இலங்கை அணிக்கு எதிராக ரன்களை வாரி இறைக்கவில்லையா? என கேட்கிறார்கள்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

போட்டி துவங்கிய போது, அணியில் ஷமி இடம் பெறாதது கண்டு இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். ஜாகிர் கான், முரளி கார்த்திக் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் ஷமியை ஏன் களமிறக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

Story first published: Tuesday, July 9, 2019, 16:24 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+