Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் பவுலிங்கை விட்டுறணும்.. தப்பித்தவறி கூட பவுண்டரி அடிச்சுறக் கூடாது.. நியூசி. திட்டம் இதுதான்

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ | அவர் பவுலிங்கை விட்டுறணும்! நியூசி. திட்டம் இதுதான்- வீடியோ

மான்செஸ்டர் : இந்திய அணியின் பந்துவீச்சு வலுவாக இருக்கும் நிலையில், அதை சமாளிக்க நியூசிலாந்து அணி தனியாக திட்டம் போட வேண்டிய நிலையில் உள்ளது.

2019 உலகக்கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதிப் போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் இந்தியா தான் வெற்றி பெறும் என்பது பொதுவான கணிப்பாக உள்ளது. நியூசிலாந்து அணி தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்து அரையிறுதிப் போட்டிக்குள் காலடி எடுத்து வைக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு அழுத்தம்

நியூசிலாந்து அணிக்கு அழுத்தம்

அதனால், நியூசிலாந்து அணிக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால், முந்தைய தோல்விகளை எல்லோரும் மறந்து விடுவார்கள். ஒருவேளை அரையிறுதியிலும் தோல்வி அடைந்தால், கடும் விமர்சனத்தை எதிர் கொள்ள நேரிடும்.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து அணிய மோசமாக சறுக்குவது பேட்டிங்கில் தான். அதனாலேயே, இந்திய பவுலிங் குறித்து கவலையில் உள்ளது அந்த அணி. நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டுமே அபாரமாக பேட்டிங் செய்து வருகிறார். ராஸ் டெய்லர் சராசரியாக ரன் குவித்து உள்ளார், நீஷம் ஒரீரு போட்டிகளில் போராட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற பேட்ஸ்மேன்கள் நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதே உண்மை.

இந்திய பந்துவீச்சு

இந்திய பந்துவீச்சு

மோசமான பேட்டிங் வரிசை கொண்ட நியூசிலாந்து அணி விரைவில் விக்கெட் இழக்காமல் இருப்பது மிகவும் முக்கியம். அதனால், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து இந்திய அணியின் முந்தைய போட்டிகளை ஆராய்ந்து திட்டம் வகுத்து வருகிறது.

என்ன திட்டம்?

என்ன திட்டம்?

அதன்படி, இந்திய அணியில் எதிரணிகளை மிரட்டி வரும் பும்ராவின் பந்து வீச்சில் நிதானமாக ஆடி விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டு, மற்ற பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் அடித்து துவைப்பது தான் அந்த அணியின் திட்டமாக இருக்கும்.

இங்கிலாந்து போட்டி

இங்கிலாந்து போட்டி

லீக் சுற்றில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளித்து ரன் குவித்த ஒரே அணி இங்கிலாந்து தான். அந்த பும்ராவின் ஓவர்களில் கொஞ்சம் அடக்கி வாசித்தது, மற்ற பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் வெளுத்து வாங்கியது. அதே திட்டத்தை தான் நியூசிலாந்து அணியும் அரையிறுதியில் செயல்படுத்தும்.

Story first published: Tuesday, July 9, 2019, 11:13 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+