Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்தை மிரட்டிய சிஎஸ்கே கூட்டணி.. தோற்றாலும் ஹேட்ஸ் ஆஃப் சொன்ன ரசிகர்கள்! #INDvsNZ

Recommended Video

கிண்டல் செய்தவர்களுக்கு அதிரடியில் மூலம் பதில் கூறிய ஜடேஜா

மான்செஸ்டர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா போராடி தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோனி - ரவீந்திர ஜடேஜா மட்டுமே கடைசி வரை போராடினர். நியூசிலாந்து அணி அவர்கள் பேட்டிங்கை கண்டு மட்டுமே மிரண்டது.

இந்திய அணி தோல்வி அடைந்தாலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் போனாலும், ரசிகர்கள் அவர்களின் போராட்டத்தை பாராட்டி வருகின்றனர்.

நியூசிலாந்து ஸ்கோர்

நியூசிலாந்து ஸ்கோர்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. இந்திய அணி எளிதாக இந்த இலக்கை எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது வேறாக இருந்தது.

இந்தியா அதிர்ச்சி

இந்தியா அதிர்ச்சி

இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ராகுல், கேப்டன் கோலி - மூவரும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா 5 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து அதிர்ச்சி அளித்தது. மிடில் ஆர்டரில் தோனியை களமிறக்காமல், அவருக்கு முன் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பண்டியா களமிறங்கினர். அவர்களும் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தோனி - ஜடேஜா அபாரம்

தோனி - ஜடேஜா அபாரம்

அடுத்து பேட்டிங் வரிசையில் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் தோனி, ஜடேஜா களமிறங்கினர். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேட்டிங் செய்தனர். ஏழாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணிக்கு ஆட்டம் காட்டினர்.

ஜடேஜா அசத்தல்

ஜடேஜா அசத்தல்

ஜடேஜா அசத்தலாக ஆடினார். தோனி பொறுமையாக ஆட, ஜடேஜா வெளுத்து வாங்கினார். நான்கு சிக்ஸர்கள், நான்கு ஃபோர் அடித்த அவர் 59 பந்துகளில் 77 ரன்கள் குவித்து 48வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

தோனி போராட்டம்

தோனி போராட்டம்

அடுத்து தோனி 72 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அவர் 49வது ஓவரில் மார்டின் குப்டிலின் அபார த்ரோவால் ரன் அவுட் செய்யப்பட்டார், அத்துடன் இந்திய அணியின் வெற்றிக் கனவும் தகர்ந்தது.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. எனினும், தோனி, ஜடேஜாவின் போராட்டத்தை இந்திய ரசிகர்கள் பாராட்டித் தள்ளினர்.

Story first published: Wednesday, July 10, 2019, 21:08 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+