For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்குதான் ஜடேஜா டீம்ல இருக்கணும்.. நியூசிலாந்தை சுத்தி சுத்தி அடித்த ஜடேஜா! #INDvsNZ

Recommended Video

கிண்டல் செய்தவர்களுக்கு அதிரடியில் மூலம் பதில் கூறிய ஜடேஜா

மான்செஸ்டர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஜடேஜா அசத்தலாக செயல்பட்டார்.

அவரது பந்துவீச்சு மட்டுமல்லாது, பீல்டிங்கும் அசத்தலாக இருந்தது. நியூசிலாந்து அணியை ஜடேஜா பல வழிகளிலும் திணறடித்தார்.

ஜடேஜா உலகக்கோப்பை தொடரில் பெரும் காத்திருப்புக்கு பின்னரே வாய்ப்பு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து பேட்டிங்

அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பும்ரா, புவனேஸ்வர் குமார் அசத்தலாக பந்துவீசினர். முதல் பத்து ஓவர்களில் நியூசிலாந்து அணி 27 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பீல்டிங்

பீல்டிங்

அப்போது ஜடேஜாவின் பீல்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. ஜடேஜா பல பவுண்டரிகளை தடுத்து, நியூசிலாந்து அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தார். ஜடேஜா இருக்கும் திசையில் ஒரு பந்து கூட அவரை தாண்டிச் செல்லவில்லை.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

அடுத்து பந்துவீச்சிலும் ஜடேஜா அசத்தினார். முதலில் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. அதன் பின் ஜடேஜா, துவக்க வீரர் ஹென்றி நிக்கோல்ஸ்-இன் விக்கெட்டை சாய்த்தார். அதன் பின் அவருக்கு நம்பிக்கை அதிகரித்தது. முதலில் ஓவருக்கு 5 ரன்களுக்கும் மேல் கொடுத்து வந்த ஜடேஜா, பத்து ஓவர்கள் வீசி முடித்த போது 34 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார்.

டெய்லர் ரன் அவுட்

டெய்லர் ரன் அவுட்

அதன் பின் மழையால் போட்டி நிறுத்தப்பட்டு மறுநாள் தொடங்கியது. நியூசிலாந்து அணி 250 ரன்கள் எடுக்க விடக் கூடாது என்ற நிலையில், ஜடேஜா அபார த்ரோ மூலம் அதிரடி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் விக்கெட்டை வீழ்த்தினார்.

அற்புத கேட்ச்

அற்புத கேட்ச்

அடுத்து டாம் லாதம் கொடுத்த கடின கேட்ச்சை பிடித்து அசத்தினார். நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 239 ரன்கள் எடுத்தது. ஜடேஜா ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். ஜடேஜாவை ஏன் இத்தனை போட்டிகளில் களமிறக்கவில்லை என கேள்வி எழுப்பினர். எனினும், இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இந்திய அணி சேஸிங்கில் சொதப்பியது. ரோஹித், கோலி, ராகுல் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Story first published: Wednesday, July 10, 2019, 16:36 [IST]
Other articles published on Jul 10, 2019
English summary
IND vs NZ Cricket World cup 2019 : Ravindra Jadeja fileding efforts were brilliant
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+