Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப வலிக்குதா? வலிச்சா தான் என் ஞாபகம் வரும்.. செமி பைனலில் இந்தியா தோல்வி.. தெறிக்கவிட்ட மீம்ஸ்!

Recommended Video

MS Dhoni | ஒரு சகாப்தத்தின் தலைவன் தோனி

மான்செஸ்டர் : 2019 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு இந்திய அணியை தாளித்து இருக்கிறார்கள். வழக்கம் போல கணக்கு வழக்கில்லாமல் இந்திய அணியை கலாய்த்து இருக்கிறார்கள். அவற்றில் சில -

வலிச்சா தான் ஞாபகம் வரும்

போட்டியில் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி வந்த ராகுல் என மூவரும் வெறும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது ரசிகர்கள் தோனி தான் அணியை காப்பாற்ற வேண்டும் என ட்வீட் போட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்போது தோனி என்ன நினைத்து இருப்பார்? "வலிக்குமே.. வலிச்சா தான்டா உங்களுக்கு என் ஞாபகம் வரும்"

இதுக்கு பேசாம..

மழையால் மறுநாள் நடத்தப்பட்ட போட்டியில், இந்தியாவின் பேட்டிங் மோசமாக இருந்தது. 5 ரன்களுக்கு 3 விக்கெட்கள் போனது. அடுத்து 92 ரன்களுக்கு 6 விக்கெட்கள் போனது. அப்போதே அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி ஆனது. அந்த நிலையில், ரசிகர்களின் மனநிலை.. "இதுக்கு பேசாம மழையே பெஞ்சுருக்கலாம்"

நம்பி ஏமாற்றும் இந்தியா

கடந்த ஐந்து வருடங்களாக இந்திய அணி டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களில் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டி வரை முன்னேறும் இந்திய அணி அதன் பின் தோல்வி அடைந்து கோப்பை வெல்லாமல் ஏமாற்றி வருகிறது.

இது பும்ரா ஸ்பெஷல் மீம்!

பிரேமம் படத்தில் நடித்த அனுபமா, கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக ஒரு ட்ராக் ஓடிக் கொண்டு இருக்கிறது. அது உண்மையா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்க, தோல்வி அடைந்த பும்ராவுக்கு, அனுபமா ஆறுதல் கூறுவது போல இங்கே ஒரு மீம்!

லீவு போட்டவர்கள்

பலர் இந்தியா ஆடிய அரையிறுதிப் போட்டியை பார்க்க லீவு போட்டு இருந்தார்கள். அவர்களின் மைன்ட் வாய்ஸ்!

Story first published: Thursday, July 11, 2019, 13:51 [IST]
Other articles published on Jul 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+