விஜய் ஷங்கருக்கு அடித்தது அதிர்ஷ்டம்.. அணியில் இடம் உறுதி.. வெளியானது வீடியோ!
Recommended Video
நாட்டிங்ஹாம் : காயமடைந்துள்ள தவானுக்கு பதில் விஜய் ஷங்கர் தான் நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்க உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் தவான் ஆடாத நிலையில், அணியில் யார் இடம் பெறுவார்கள் என்ற விவாதம் நடைபெற்று வந்தது. தற்போது அதற்கு முடிவு தெரிந்துள்ளது என்கிறார்கள் விமர்சகர்கள்.

தவான் காயம்
இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய லீக் போட்டியில் துவக்க வீரர் ஷிகர் தவான் காயமடைந்தார். 9வது ஓவரில் பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் அவரது இடது கை பெரு விரலில் காயம் ஏற்பட்டது. அதனால், மூன்று வார காலம் தவான் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட முடியாது என கூறப்பட்டது.

மாற்று வீரர் யார்?
ஐசிசி விதியின் படி, தவான் காயமடைந்து இருப்பதால், இந்தியா அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய முடியும். தவானுக்கு மாற்று வீரராக இந்தியா யாரை தேர்வு செய்யும் என்ற பேச்சு கிளம்பியது.

ரிஷப் பண்ட்
பலரும் ரிஷப் பண்ட் தான் சரியான தேர்வு என கூறினார்கள். அதே போல, ரிஷப் பண்ட் அடுத்த 48 மணி நேரத்தில் இங்கிலாந்து கிளம்பி செல்ல உள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியானது.
விஜய் ஷங்கர் - தினேஷ் கார்த்திக்
இந்த நிலையில் தான், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் பயிற்சி வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் விஜய் ஷங்கர் 30 நிமிடம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். தினேஷ் கார்த்திக் 10 நிமிடம் பேட்டிங் பயிற்சி செய்தார்.

விஜய் ஷங்கர் உறுதி
இந்த வீடியோவை வைத்து விஜய் ஷங்கர் தான் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என்கிறார்கள். காரணம், அவர் 30 நிமிடம் முழுமையாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார் என்றும் கூறப்படுகிறது.

நியூசிலாந்து தொடர்
முன்னதாக உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியிலும், ஐபிஎல் தொடரிலும் விஜய் ஷங்கர் சரியாக பேட்டிங் செய்து ரன் குவிக்கவில்லை. எனினும், நியூசிலாந்து தொடரில் அவர் சிறப்பாக ஆடி ரன் குவித்தார். அதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

எந்த இடத்தில் பேட்டிங்?
ஒருவேளை விஜய் ஷங்கர் அணியில் இடம் பெற்றால், அவர் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்வார். நான்காம் இடத்திற்காக தேர்வு செய்யப்பட்ட ராகுல், தவான் இல்லாத நிலையில், துவக்க வீரராக களமிறங்குவார்.


Click it and Unblock the Notifications