Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமாக ஊத்திக் கொண்ட இந்திய பேட்டிங்.. பிட்ச் தான் காரணமா? புட்டுபுட்டு வைத்த முன்னாள் வீரர்கள்!

Recommended Video

ஓல்டு டிராபோர்ட் மைதானத்தை கழுவி ஊத்தும் முன்னாள் ஜாம்பவான்கள்

மான்செஸ்டர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. டாப் ஆர்டர் மொத்தமாக கைவிட்டது. மிடில் ஆர்டர் சிறிது நேரம் போராடி விட்டு கைவிட்டது.

இந்த மோசமான நிலை ஏன் ஏற்பட்டது என இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், அரையிறுதிக்கு தயார் செய்யப்பட்ட பிட்ச் தான் மோசமான போட்டி மோசமாக செல்ல முக்கிய காரணம் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் சிலர் கூறிய தகவல் வெளியாகி உள்ளது.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி மிகவும் மந்தமாக பேட்டிங் செய்தது. அப்போது இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருப்பதாக பலரும் கூறி வந்தனர்.

மந்தமான பிட்ச் தேர்வு

மந்தமான பிட்ச் தேர்வு

ஆனால், போட்டி நடைபெற்ற மான்செஸ்டர் மைதானத்தில் உள்ள பல பிட்ச்களில் மிகவும் மந்தமான பிட்ச்சை தேர்வு செய்தது தான் காரணம் என என இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் ஃபவுலர் கூறினார். அவர் உள்ளூர் கவுன்டி போட்டிகளில் அதே மைதானத்தில் ஏராளமான போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர்.

குப்பை பிட்ச்கள்

குப்பை பிட்ச்கள்

அடுத்து மற்றொரு, முன்னாள் வீரர் மார்க் புட்சர் கூறுகையில், இந்த தொடரில் பல குப்பை பிட்ச்கள் பயன்படுத்தப்பட்டன என குறிப்பிட்டார். அவர்கள் முதல் நாள் போட்டியின் போதே இந்த கருத்தை கூறினார்கள்.

ஆடுகளம் மாறியது

ஆடுகளம் மாறியது

அதன் பின் மழை பெய்து பாதி நாள் போட்டி தடைபட்டது. மறுநாள், ஏற்கனவே மந்தமான ஆடுகளம் இன்னும் மோசமாக மாறியது. பேட்ஸ்மேன்கள் பந்தை கணிக்கவே முடியாத அளவு பிட்ச் மாறியது.

டாப் ஆர்டர் சரிவு

டாப் ஆர்டர் சரிவு

இந்திய அணியின் டாப் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலியால் கூட தாக்குப் பிடித்து ஆட முடியவில்லை. ரோஹித், கோலி, ராகுல் என மூன்று டாப் ஆர்டர் வீரர்களும் வெறும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஐசிசி பதில்

ஐசிசி பதில்

அடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போராடினாலும், இந்தியா 92 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதற்கு மோசமான பிட்ச் தான் காரணம் என்பதை இங்கிலாந்து முன்னாள் வீரர்களே கூறி விட்டனர். ஐசிசி பதில் சொல்லுமா?

Story first published: Wednesday, July 10, 2019, 18:29 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+