Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ பெங்களூர் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி? இதுதான் ஒரே வழி.. என்ன செய்ய வேண்டும்?

பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா? இல்லையா? என்ற கேள்வியே தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. பலரும் 107 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணி ஊதித் தள்ளி விடும் என கூறி வரும் நிலையில் இந்தியா வெல்வதற்கு என்ன வாய்ப்பு உள்ளது? என்பது பற்றி பார்க்கலாம்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் அன்று இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து மிகப் பெரிய தவறை செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி எளிதாக ரன் சேர்த்து 402 ரன்கள் எடுத்தது.

ind vs nz india new zealand

அடுத்த இரண்டாவது இன்னிங்ஸில் பதிலடி தந்த இந்திய அணி 462 ரன்கள் சேர்த்தது. ஐந்தாம் நாள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் ஐந்தாம் நாள் காலையில் பந்தை ஸ்விங் செய்து விரைவாக விக்கெட்களை வீழ்த்தினால் மட்டுமே வெற்றிக்கான முதல் படியை இந்தியா எடுத்து வைக்க முடியும்.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்தும், பவுன்ஸ் செய்தும் இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி விக்கெட்களை வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸ் மட்டுமல்ல இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் கடைசி 7 விக்கெட்களை 54 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர்.

அதேபோல இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் சிராஜ் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி விரைவாக விக்கெட்களை வீழ்த்த வேண்டும். இவர்களால் முதல் இன்னிங்ஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் ஏழு விக்கெட்களை வீழ்த்தினர். ஆனால், அவர்கள் அதிக ரன்களையும் விட்டுக் கொடுத்து இருந்தனர்.

எனவே, 107 தங்களை அடிக்க விடாமல் நியூசிலாந்தை கட்டுப்படுத்துவது என்பது சிரமமான ஒன்றுதான். அதே சமயம் இந்த போட்டியின் ஐந்தாவது நாள் அன்று மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. எனினும், மழைக்கு இடையே 20 முதல் 30 ஓவர்கள் கிடைத்தால் கூட நியூசிலாந்து அணி 107 ரன்கள் என்ற சிறிய இலக்கை எட்டி விட முடியும்.

Story first published: Saturday, October 19, 2024, 21:27 [IST]
Other articles published on Oct 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+