IND vs NZ: இது லிஸ்டிலே இல்லையே.. ரிஷப் பண்ட்க்கு பதில் மாற்று வீரர் அறிவிப்பு.. பிசிசிஐ அதிரடி
வதோதராவில் நடந்த பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக, நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து நட்சத்திர விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இளம் வீரர் துருவ் ஜூரல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை அன்று, நீண்ட வலைப்பயிற்சியின்போது வீசப்பட்ட பந்து விலா எலும்பில் தாக்கியதால் பன்ட்க்குப் காயம் ஏற்பட்டது.
பன்ட் வலியால் துடித்தபோது, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உட்பட அணியினர் அவரை சோதித்தனர். பண்ட்க்கு ஏற்பட்ட காயம் குணமடைய 10 நாட்கள் தேவைப்படும். டி20 அணியில் இல்லாத பன்ட், ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடங்கும் ரஞ்சி டிராபியில் விளையாடவில்லை எனில், 2026 ஐபிஎல் தொடரில்தான் களமிறங்குவார். அவர் கடைசியாக ஆகஸ்ட் 2024 இல் இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.

மறுபுறம், விஜய் ஹசாரே டிராபியில் உத்தரப் பிரதேச அணிக்காகச் சிறப்பான ஃபார்மில் இருந்த துருவ் ஜூரல், பண்ட்க்கு மாற்று வீரராக சனிக்கிழமை இரவே இந்திய அணியுடன் இணைந்தார். பன்ட் காயம் காரணமாக விலக்கப்பட்டவுடனேயே தேர்வுக் குழுவினர் ஜூரலை அணியில் சேர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2025-26 விஜய் ஹசாரே டிராபியில் ஜூரல், உத்தரப் பிரதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் ஆவார். ஏழு ஆட்டங்களில் 90-க்கும் மேற்பட்ட சராசரியுடன் 558 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் நான்கு அரை சதங்களும் அடங்கும்.
ஜூரலின் சிறந்த பேட்டிங் மூலம் உபி அணி தொடர்ந்து 7 வெற்றிகளுடன் 28 புள்ளிகளைப் பெற்றுள்ள உத்தரப் பிரதேச அணியை எலைட் பி பிரிவின் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்குக் கொண்டு வந்தது. விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதிப் போட்டியில் உத்தரப் பிரதேசம், சவுராஷ்டிராவை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications