Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரு இப்படி தான்.. வாயை வைத்து சும்மா இருக்க மாட்டாரு.. சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பொளக்கும் ரசிகர்கள்!

மும்பை: வடமாநில கிரிக்கெட் வீரர்களை பற்றி அதிகம் தெரியாது என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் குறித்த விவாதத்தின் போது மஞ்ச்ரேக்கர் இவ்வாறு பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளார். ஜடேஜாவை "பிட்ஸ் அண்ட் பீசஸ்" என்று விமர்சித்த போது, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே அவருக்கு கடுமையாக பதிலடி கொடுத்தது. அதன்பின்னரும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையில் செய்த போது, ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

t20 world cup 2024 sanjay manjrekar harmanpreet kaur 20 2024

குறிப்பாக மும்பை வீரர்களை பாராட்டுவதும் மற்ற வீரர்களை தூற்றுவதும் அவரின் வர்ணனையின் ஒரு பகுதியாகவே இருக்கும். இந்த நிலையில் மீண்டும் மும்பை லாபியை தூக்கி பிடிக்கும் நோக்கில், புதிய சர்ச்சையை சிக்கி உள்ளார். மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது.

இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி வெறும் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் சுமாராகவே இருந்தது.

இந்த நிலையில் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் முனிஷ் பாலி குறித்து வர்ணனையில் பேசப்பட்டது. அப்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர், மன்னிக்கவும்.. அவரை என்னால் சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. வட மாநில வீரர்களை பற்றி எனக்கு அதிகமாக தெரியாது என்று வார்த்தையை விட்டார். இதனால் வட இந்திய ரசிகர்கள் பலரும் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பொளந்து கட்டி வருகின்றனர்.

"வட இந்திய வீரர்களை பற்றி தெரியாது" என்று கூறியதன் மூலமாக வட இந்திய ரசிகர்களையும், முன்னாள் வீரர்களையும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவமானப்படுத்தி இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. அதேபோல் மும்பை லாபியை தூக்கி பிடிப்பதற்காக வேண்டுமென்றே மஞ்ச்ரேக்கார் வட மாநில வீரர்களை உதாசினப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

2008ஆம் ஆண்டு யு19 உலகக்கோப்பை தொடரை விராட் கோலி வென்ற போது, அந்த அணிக்கு துணைப் பயிற்சியாளராக செயல்பட்டவர் முனிஷ் பாலி. அதேபோல் அண்மையில் இந்திய அணி அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்த்து விளையாடிய போது விவிஎஸ் லக்‌ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட்டார். அவருக்கு முனிஷ் பாலி துணையாக இருந்தார்.

அதேபோல் பஞ்சாப் மாநில கிரிக்கெட் அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். வர்ணனைக்கு வருவதற்கு முன்பாக இந்திய அணி வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பயிற்சியாளர்கள் குழுவில் இருப்பவர்கள் பற்றி அடிப்படை தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வந்ததால், அவரை வர்ணனை செய்வதில் இருந்தே தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, October 5, 2024, 18:51 [IST]
Other articles published on Oct 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+