Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: ”கேஎல் ராகுல்னு ஒருத்தன் வந்தான் சார்.. மொத்தமாக முடிச்சிவிட்டான்” தெறிக்கும் மீம்ஸ்!

பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கியுள்ள ஜாலியான மீம்ஸை பார்க்கலாம்.

"குஸ்தி" படத்தில் நடிகர் தியாகு, "சாம்பிராணி புகை போடுறேனு ஒருத்தன் வந்தான் சார்.. மொத்தமாக கடையவே முடிச்சிட்டான் சார்" என்று போலீஸாரிடம் வாக்குமூலம் அளிப்பார். அதனை அப்படியே இந்திய அணியின் ரசிகர்களுக்கு மாற்றி, "மேட்ச் நல்லா போய்ட்டு இருந்துச்சு சார்.. கேஎல் ராகுல்னு ஒருத்தன் க்ரீஸ்-க்குள்ள வந்தான் சார்.. மொத்தமா முடிஞ்சி போச்சு" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு ரசிகனின் புலம்பல் பாஸ்.

ind vs nz memes sarfaraz khan

அண்மையில் ஒரு வீடியோவில் சிறுவன் ஒருவர், "அண்ணனுக்கு ஒன்னுனா என்ன வேண்டுமானாலும் செய்வோம்" என்பார். அதற்கு, என்ன செய்வீங்க என்ற மறுகேள்வி கேட்கும் போது, "ஒன்னுமே செய்ய முடியாதுணே" என்று ரொம்ப ஓபனாக பேசியது ட்ரெண்டாகியது. அதனை அப்படியே இந்திய அணி பவுலர்களுக்கு மாற்றி, "107 ரன்களை இலக்காக வைத்து கொண்டு ஒன்னுமே பண்ண முடியாதுணே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வாய்ப்பில்லை ராஜா ரகம்.

ind vs nz memes sarfaraz khan

"கஜினி" படத்தில் நடிகர் சத்யன், "அக்கா கோட் சூட்லாம் ரெடியா இருக்கு.. நீங்க சொன்னீங்கனா பின் வழியா ஏறி குதிச்சு உடனே வந்திடுவேன்" என்று அசினிடம் கடுப்பேற்றுவார். அதுபோல் அண்மையில் தெலங்கானா டிஎஸ்பி-யாக சிராஜ் பொறுப்பேற்று கொண்டார். இந்த போட்டியின் 4வது நாள் இறுதியில் நடுவருடன் விராட் கோலி, ரோஹித் சர்மா மோதி கொண்டனர். அதனை அருகில் இருந்து பார்த்த சிராஜை வைத்து கஜினி காட்சியை மாற்றி, சிராஜ் சக வீரரான விராட் கோலியிடம் கூறுவது போல், "அண்ணா.. யூனிஃபார்ம்-லாம் ரெடியா இருக்கு.. நீங்க மட்டும் "ஹும்"னு சொன்னீங்கனா இவரை அரெஸ்ட் பண்ணிடுவேன்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

ind vs nz memes sarfaraz khan

விஐபி படத்தில் தனுஷ், "உன்னை விட்டுவிட்டு வேறு பைக் ரெடி பண்ண போனது தப்பு தான்.. என்னை மன்னித்துவிடு" என்று வண்டியின் முன் விழுந்து கும்பிடுவார். அதனை அப்படியே சிஎஸ்கே ரசிகர்களாக தனுஷையும், பைக்-காக ரச்சின் மற்றும் கான்வே-வையும் மாற்றி, "நீங்க ஃபார்முக்கு வருவது சந்தோஷம் தான்.. அதுக்குனு எங்க கூடவா ஃபார்முக்கு வருவீங்க" என்று காலில் விழுந்து கதறுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயோ முடியலை.. ரொம்ப அடிக்கிறாங்க ரகம்.

ind vs nz memes sarfaraz khan

வேதம் படத்தில் வரும் நடிகர் அர்ஜுன், ஒரே பாட்டில் காதலி அழைத்த இடத்திற்கு செல்வதற்காக உயிரைக் கொடுத்து ஓடிக் கொண்டே இருப்பார்.. இடையே இடையே சண்டைக் காட்சிகள், குழந்தையை காப்பாற்றும் காட்சிகளும் வரும்.. அதில் வரும் அர்ஜுனாக நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸை மாற்றி, "இந்த பந்து பவுண்டரி போனால் நான் செத்துருவேன்" என்று மனதளவில் சொல்லிக் கொண்டு ஃபீல்டிங் செய்ததை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்டகாசம்.

ind vs nz memes sarfaraz khan
Story first published: Monday, October 21, 2024, 8:20 [IST]
Other articles published on Oct 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+