Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலையாட்ட மறுத்த குட்டி கோலி.. அடம்பிடித்த ஜடேஜா.. வீணாகிய டிஆர்எஸ்.. ஆனாலும் கடைசியில் ட்விஸ்ட்!

துபாய்: நியூசிலாந்து அணியின் டாம் லேதம் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்திய அணி ஒரு டிஆர்எஸ் வாய்ப்பை இழந்திருக்கிறது. கள நடுவர் அவுட் கொடுக்காத நிலையில், ஜடேஜா டிஆர்எஸ் முறையிடலாம் என்பதில் தீர்மானமாக இருந்தார். ஆனால் அதற்கு கேஎல் ராகுல் தலையாட்ட மறுத்த போது, கேப்டன் ரோஹித் சர்மா டிஆர்எஸ் முறையீடு செய்ததால், இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடி வரும் நியூசிலாந்து அணி, முதல் விக்கெட்டுக்கு 57 ரன்களை குவித்தது. நிதானமாக ஆடி கொண்டிருந்த வில் யங் 15 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 37 ரன்களிலும், கேன் வில்லியம்சன் 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

ed raid tamilnadu tasmac

இதனால் நியூசிலாந்து அணி 18 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் இணைந்த டேரல் மிட்சல் - டாம் லேதம் கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் அட்டாக்கில் இருந்து வெளியேறிய பின், ரவீந்திர ஜடேஜா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். டாம் லேதம் விக்கெட்டை வீழ்த்தினால், ஆட்டத்தில் இந்திய அணியின் கைகள் உயரும் என்று பார்க்கப்பட்டது.

அப்போது ஜடேஜா வீசிய 4வது பந்து டாம் லேதமின் பேடில் அடித்து சென்றது. அப்போது அம்பயரிடம் ஜடேஜா கடுமையாக அப்பீல் செய்த போது, நடுவர் கொஞ்சம் கூட அசரவில்லை. இதனால் ஜடேஜா உடனடியாக டிஆர்எஸ் எடுக்க வேண்டும் என்று ரோஹித் சர்மாவிடம் கேட்டுக் கொண்டார். இதன்பின் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பரான கேஎல் ராகுலின் கருத்தை கேட்டார்.

அதற்கு பந்து கொஞ்சம் உயரமாக செல்லும் என்று சொல்ல, ஜடேஜா டிஆர்எஸ் எடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். 3 நொடிகள் இருந்த போது, ரோஹித் சர்மா டிஆர்எஸ் அப்பீல் கேட்க, 3வது நடுவர் ரீப்ளேவில் பார்த்த போது, அந்த பந்து ஸ்டம்புகளுக்கு மேல் உயர சென்றது. இதனால் இந்திய அணி ஒரு டிஆர்எஸ் வாய்ப்பை பறிகொடுத்தது.

அம்பயர்ஸ் கால் வரும் என்ற எண்ணத்தில்தான் ரோஹித் சர்மா டிஆர்எஸ் கோரினார். ஆனால் நாட் அவுட் என்று தீர்ப்பு வந்ததால், ரோஹித் சர்மாவின் முகமே மாறியது. ஆனால் அடுத்த ஓவரிலேயே நியூசிலாந்து அணியின் டாம் லேதம் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தி ட்விஸ்ட் வைத்தார். இதனால் நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Story first published: Sunday, March 9, 2025, 16:45 [IST]
Other articles published on Mar 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+