Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: வருண் சக்கரவர்த்தியால் நியூசிலாந்து அச்சம்.. டாஸ் வென்றால் இதுதான் முடிவு - மைக் ஹெஸ்ஸன்

துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றால், நிச்சயமாக முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்யும் என அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் கூறி இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே வருண் சக்கரவர்த்தி தான் எனவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

வருண் சக்கரவர்த்திக்காக நியூசிலாந்து அணி நிச்சயமாக திட்டமிடும். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் தயங்குவார்கள் என்ற விஷயத்தை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வருண் சக்கரவர்த்தி இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.

New Zealand

குரூப் சுற்றில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய போது வருண் சக்கரவர்த்தி இந்த தொடரில் முதல் வாய்ப்பை பெற்றார். அந்தப் போட்டியில் அவர் நியூசிலாந்து அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 249 ரன்களை எடுத்தது.

இந்த சிறிய இலக்கை நியூசிலாந்து அணி எட்டுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசி 10 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். இதை அடுத்து நியூசிலாந்து அணி 25 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் நியூசிலாந்து இரண்டாவது பேட்டிங் செய்தது. அப்போது இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை சந்திப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர் நியூசிலாந்தின் பேட்ஸ்மேன்கள். ஆனால் இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடிய பொது நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

அப்போது அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 362 ரன்களை சேர்த்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா அணி சேசிங் செய்த போது, தங்களின் பந்துவீச்சை வைத்து அவர்களை அச்சுறுத்தி வெற்றி பெற்றது. குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களை வைத்துதான் நியூசிலாந்து அணி அந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது.

எனவே அதே பாணியை தான் இந்திய அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி பயன்படுத்த முயற்சிக்கும். ஆனால் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தால், நியூசிலாந்து அணி சேசிங் செய்வது மிகவும் சிரமமாக இருக்கும். ரன் ரேட் விகித அழுததால் சரியாக பேட்டிங் செய்ய முடியாமல் விக்கெட்களை இழக்க நேரிடும்.

குறிப்பாக அன்ஆர்த்தோடெக்ஸ் முறையில் பந்து வீசும் வருண் சக்கரவர்த்தியை சமாளிப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதை தவிர்க்கவே நியூசிலாந்து அணி டாஸ் வென்றால் நிச்சயமாக பேட்டிங் தேர்வு செய்யும் என மைக் ஹெஸ்ஸன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

Story first published: Friday, March 7, 2025, 8:38 [IST]
Other articles published on Mar 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+