Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ Final: சிவம் துபே மட்டும் இல்லைனா.. இந்தியா 255 ரன்கள் குவிக்க காரணமே அவர்தான்!

அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி முதல் 15 ஓவர்களில் மிகச்சிறப்பாக விளையாடியது. ஆனால், பின் விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்கவே தடுமாறியது. அப்போது கடைசி ஓவரில் சிவம் துபே காட்டிய அதிரடியால் இந்திய அணி ஒரு மிகப்பெரிய இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது.

மூன்று அரைசதங்கள்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் அந்த முடிவு அவர்களுக்கு பாதகமாக அமைந்தது. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி முதல் ஓவரில் இருந்தே நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக 7.2 ஓவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களை எட்டி சாதனை படைத்தது.

அபிஷேக் சர்மா வெறும் 21 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன், சஞ்சு சாம்சனுடன் இணைந்து ரன் வேகத்தை குறையாமல் பார்த்துக் கொண்டார். இஷான் கிஷன் 25 பந்துகளில் 54 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்களும் குவித்தனர். முதல் மூன்று பேட்ஸ்மேன்களுமே அரைசதம் கடந்து அசத்தினர். 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து மிக வலுவான நிலையில் இருந்தது.

IND vs NZ Final Shivam Dube s Last-Over Fireworks with 2 sixes and 3 fours Propels India to Massive score

16-வது ஓவரில் மாறிய ஆட்டம்

இந்திய அணி 260 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 16வது ஓவர் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஒரே ஓவரில் களத்தில் நங்கூரம் போல நின்றிருந்த சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளும் வீழ்ந்தன.

இதனால் ரன் வேகம் வெகுவாக குறைந்தது. அடுத்து வந்த திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவால் எதிர்பார்த்த அளவு ரன்களை குவிக்க முடியவில்லை. ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 231 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 240 - 250 ரன்களை கடப்பதே கடினம் என்ற சூழல் அப்போது நிலவியது.

கடைசி ஓவரில் மிரட்டிய சிவம் துபே

கடைசி ஓவரில் சிவம் துபே களத்தில் இருந்தார். அந்த ஓவரை ஜேம்ஸ் நீஷம் வீசினார். அவர் 3 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். 20வது ஓவரை முழுமையாக எதிர்கொண்ட அவர், நீஷம் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அந்த ஓவரில் மட்டும் அவர் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசி 24 ரன்களை பெற்றுத் தந்தார்.

மொத்தமாக 8 பந்துகளை மட்டுமே சந்தித்த சிவம் துபே, 325 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 26 ரன்கள் குவித்தார். அவரது இந்த இறுதி நேர அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 255 ரன்கள் என்ற பாதுகாப்பான ஸ்கோரை எட்டியது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இது மிகச்சிறந்த ஸ்கோராக அமைந்தது.

Story first published: Sunday, March 8, 2026, 21:57 [IST]
Other articles published on Mar 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+