மகனே சாதிச்சிட்ட டா! சூர்யகுமாரை கட்டி அணைத்து முத்தமிட்ட தாய்.. டி20 உலககோப்பை வென்ற பிறகு நெகிழ்ச்சி
அகமதாபாத்: 2026 டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் டி20 உலக கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணி சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்ற ஒரே அணி, தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பையை வென்ற முதல் அணி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய நியூசிலாந்து அணி தடுமாறியது. இந்திய அணி வீரர்கள் பட்டையை கிளப்பி ரன்களை குவித்தனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 255 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி பதிலுக்கு 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அசத்தி இருக்கிறது. இதனை அடுத்து போட்டியை வென்றவுடன் வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது மைதானத்தில் சிறுவர்கள் ஓடி வந்து தேசிய கொடியை வீரர்களிடம் கொடுத்தனர்.
அப்போது சூரியகுமார் தேசியக்கொடியை தூக்கி ஏந்தியவாறு ரசிகர்களிடம் காண்பித்தார். சொந்த மண்ணில் டி20 உலக கோப்பையை வென்ற உலகளவில் முதல் கேப்டன் என்ற சாதனையும் சூரிய குமாருக்கு சொந்தமானது. சூரியகுமார் யாதவ் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணிக்கு கேப்டனாக பதவி ஏற்று ஒரு தொடரில் கூட தோல்வியே தழுவாமல் அணிக்கு வெற்றியை தேடி தந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரையும், சூரியகுமார் தலைமையிலான இந்திய அணியை வென்றது. இந்த தருணத்தில் யாருமே செய்யாத சாதனையை தனது மகன் செய்ததை நினைத்து அவருடைய தாய் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டார். மைதானத்திற்குள் வந்த அவருடைய தாய் தந்தை சூரிய குமாரியாதவை கட்டி அணைத்து முத்தமிட்டனர்.
அப்போது தந்தை மிகவும் பெருமையாக அவருடன் நின்று ஒரு செல்பி எடுத்துக் கொண்டார். அதன் பின் மனைவியும் சூரியகுமார் யாதவ்க்கு வாழ்த்து தெரிவித்தனர். இதன்பின் வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினரும் மைதானத்திற்குள் வந்து இந்திய அணியின் வரலாற்று சாதனைக்கு வாழ்த்தினர்.


Click it and Unblock the Notifications