Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ Final: உலகக்கோப்பை ஜெயிப்பது 100 சதவீதம் உறுதி.. இந்தியாவுக்கு சாதகமான 5 சம்பவங்கள்

அகமதாபாத்: சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பொதுவாக இறுதிப்போட்டி என்றாலே எந்த அணி பலமாக உள்ளது, ஆடுகளம் எப்படி இருக்கும் என்றெல்லாம் நிபுணர்கள் கணிப்பார்கள். ஆனால், கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் ராசி, செண்டிமெண்ட் மற்றும் வரலாற்றில் நடந்த ஒற்றுமைகளைத் தேடிப் பார்ப்பார்கள். அந்த வகையில், இந்திய அணிதான் இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும் என்பதற்கு வலுவான ஐந்து வரலாற்று ஒற்றுமைகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. அவை என்னவென்று இங்கே காண்போம்.

இங்கிலாந்தை வீழ்த்தினால் கோப்பை உறுதி

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதியபோதெல்லாம் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துள்ளது. கடந்த 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது; அந்த முறை இங்கிலாந்துதான் கோப்பையை வென்றது. அதேபோல, 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தியது; அந்த முறை இந்தியா கோப்பையை வென்றது.

IND vs NZ Final Why India will win T20 World Cup 2026 5 reasons based on past events pointed out

தற்போது 2026 உலகக் கோப்பையிலும் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. இந்தத் தொடர் சங்கிலி அறுபடாமல் தொடரும் பட்சத்தில், இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணிதான் இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், 1983 உலகக் கோப்பையிலும் இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தியே இந்தியா கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தின் சோக வரலாறு

இந்த இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி, அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முன்னேறியுள்ளது. இது நியூசிலாந்துக்கு ஒரு துரதிர்ஷ்டவசமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இதற்கு முன் ஐசிசி தொடர்களின் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை நியூசிலாந்து வீழ்த்திய போதெல்லாம், இறுதிப்போட்டியில் தோல்வியையே சந்தித்துள்ளது.

உதாரணமாக, 2015 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதேபோல, 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து, இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. தற்போது 2026லிலும் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியே நியூசிலாந்து வந்துள்ளது. இந்த வரலாறு திரும்பினால், இறுதிப்போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைவது உறுதி.

சொந்த மண்ணில் சறுக்கலும் வெற்றியும்

இந்திய அணிக்குச் சாதகமாக மற்றொரு முக்கிய ஒற்றுமையும் உள்ளது. இது 2011 ஒருநாள் உலகக் கோப்பையோடு தொடர்புடையது. 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையில், லீக் சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்தது. ஆனால் இறுதியில் கோப்பையை வென்றது. அதேபோல, இந்த 2026 டி20 உலகக் கோப்பையிலும் சொந்த மண்ணில் விளையாடும் இந்தியா, லீக் சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. 2011 வரலாறு திரும்பினால் இந்தியா கோப்பையை வெல்லும்.

மேலும், 2007ஆம் ஆண்டு இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றபோது, சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தது. அதேபோல இந்தத் தொடரிலும் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தத் தோல்விகள் எல்லாம் இறுதியில் வெற்றிக்கான அடையாளங்களாகவே பார்க்கப்படுகின்றன. இந்த அமானுஷ்ய ஒற்றுமைகள் அனைத்தும் இந்திய அணிக்குச் சாதகமாக இருப்பதால், சூர்யகுமார் யாதவ் அணி கோப்பை வெல்வது உறுதி என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Story first published: Sunday, March 8, 2026, 8:12 [IST]
Other articles published on Mar 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+