Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ- KKR அணிக்கு சாதகமாக நடந்து கொண்ட கம்பீர்.. ஹர்சித் ரானா விவகாரததில் வசமாக சிக்கினார்

மும்பை : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 22 வயது வீரரான வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ரானா சேர்க்கப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் மூலம் இந்திய அணியின் பயிற்சியாளரான கம்பீர், தமக்கு வேண்டிய கே கே ஆர் அணிக்கு சாதகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த பிறகு மூன்றாவது போட்டியில் ஆவது வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இருக்கிறது.

ind vs nz harshit rana gautam gambhir

இதற்காக அணியில் 22 வயது வீரரான வேகப்பந்துவீச்சாளரை கம்பீர் சேர்த்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ஹர்ஷித் ரானா அறிமுகமாகி இருக்க வேண்டும். ஆனால் மூன்று டி20 போட்டிகளிலும் ஹர்ஷித் ரானாவுக்கு இடம் வழங்கப்படவில்லை. ஆனால் மற்றொரு வீரரான நிதிஷ் ரெட்டிக்கு இந்திய அணியில் கம்பீர் இடம் வழங்கினார்.

இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் இந்திய அணிக்காக விளையாட வீரரை நான்கு கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு முன்பு தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு பிறகு இந்திய அணியில் அறிமுகமானால் கூட அந்த வீரர் uncapped வீரராக தான் அறியப்படுவார் என்றும் பி சி சி ஐ விதிகள் கூறுகின்றன.

அதன் அடிப்படையில் கே கே ஆர் அணியில் ஹர்ஷித் ரானா இடம்பெற்றிருக்கிறார். கே கே ஆர் அணியின் முன்னாள் பயிற்சியாளரான கம்பீர் தன்னுடைய பவரை பயன்படுத்தி ஹர்சித் ரானாவை வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சேர்க்காமல் சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பிசிசிஐயின் விதிப்படி அக்டோபர் 30ம் தேதிக்கு பிறகு ஹர்ஷித் ரானாவை தற்போது இந்திய அணியில் சேர்த்து கே கே ஆர் அணிக்கு சாதகமான முடிவை கம்பீர் எடுத்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

நித்தீஷ் ரெட்டி இந்திய அணிக்கு தேர்வானது மூலம் சன்ரைசர்ஸ் அணி அவருக்கு கூடுதல் பணத்தை தக்க வைக்கப்படும்போது வழங்க வேண்டும். ஆனால் தற்போது ஹர்ஷித் ரானா அக்டோபர் 30ஆம் தேதிக்கு பிறகு தான் அறிமுகம் ஆகிறார் என்பதால் ஹர்ஷித் ரானா தக்க வைக்கும் பொழுது நான்கு கோடி ரூபாய் கொடுத்தாலே போதுமானது. இதனால் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டதால், அவரை பதவி விட்டு நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Story first published: Tuesday, October 29, 2024, 19:51 [IST]
Other articles published on Oct 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+