IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிராக இந்த 3 வீரர்களும் சதம் அடிப்பார்கள்.. ஹர்பஜன் சிங் கணிப்பு
வதோரா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சதங்கள் அடிப்பார்கள் என கணித்துள்ளார். விமான நிலையத்தில், இருவருமே ஒரு சேர சதம் அடிப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடினால் அவரும் சதம் அடிக்க வாய்ப்புள்ளதாகவும் ஹர்பஜன் குறிப்பிட்டார்.
"யஷஸ்வி விளையாடினால், அவருக்கும் ஒரு சதம் வரலாம்" என்றார். அண்மையில் சதம் அடித்த யஷஸ்வால், கழுத்து காயம் காரணமாக விலகிய கேப்டன் சுப்மன் கில் அணிக்கு திரும்பியதால், நியூசிலாந்து தொடரில் அணியில் இடம் பெற வாய்ப்பில்லை.

காயம் காரணமாக கடந்த ஒருநாள் தொடரை தவறவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பியது பலம் சேர்க்கிறது. ஜனவரி 10 அன்று பயிற்சி முகாமில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடரில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக துருவ் ஜூரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 உலககோப்பை நெருங்குவதால், இந்த ஒருநாள் தொடர் தற்போது பெரும் முக்கியத்துவம் ஏற்படாது. எனினும் கோலி, ரோகித் சர்மா இந்த தொடருக்கு பிறகு, இனி ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவார்கள். இரு அணிகளும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 120 முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 62 முறையும், நியீசிலாந்து 50 முறையும், ஒரு போட்டி சமனிலும், 7 போட்டி மழையாலும் ரத்தாகியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ரோஹித் ஷர்மாவின் ஒருநாள் புள்ளிவிவரங்கள்: 31 போட்டிகளில், 29 இன்னிங்ஸ்களில் 38.32 சராசரி, 85.84 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1,073 ரன்கள். இதில் ஆறு அரை சதங்கள், இரண்டு சதங்கள் (அதிகபட்சம் 147) அடங்கும்.
விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிராக இன்னும் அபாரமான புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளார். 33 போட்டிகளில், 33 இன்னிங்ஸ்களில் 55.23 சராசரி, 95.50 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1,657 ரன்கள். இதில் ஒன்பது அரை சதங்கள், ஆறு சதங்கள் (அதிகபட்சம் ஆட்டமிழக்காமல் 154) அடங்கும்.


Click it and Unblock the Notifications