Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: ஹர்திக் பாண்டியாவுக்கு லொள்ளு தான்..விக்கெட் எடுத்துவிட்டு டாடா பைபை காட்டி கொண்டாட்டம்

நாக்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தியதும் “குட்பை” கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஆல்-ரவுண்டரான அவர், வெறும் ஒரு ரன்னில் சுலபமாக ஆட்டமிழந்த ரச்சின் ரவீந்திரனுக்கு வழியனுப்பி சைகை காட்டினார்.

இந்த விக்கெட், கேப்டன் சூர்யகுமார் பாண்டியாவிடம் பந்தை வழங்கிய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே நிகழ்ந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் ரவீந்திரா ரன் கணக்கைத் தொடங்கினாலும், தேவைப்படும் ரன் விகிதம் அதிகரித்ததால், பாண்டியாவுக்கு எதிராக அதிரடி காட்ட முயன்றார். ஆனால் ரவீந்திரா, ஸ்லிப்பில் அபிஷேக் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இது நியூசிலாந்துக்கு ஆரம்பமே சோகமாக அமைந்தது. 239 ரன்கள் இலக்கை துரத்தி வந்த நியூசிலாந்தின் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது. லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியும் தனது முதல் ஓவரிலேயே டிம் ராபின்சனை வீழ்த்தினார்.பேட்டிங்கின் போது இன்னிங்ஸின் 11வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்த பாண்டியா, மிட்செல் சான்ட்னர் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கினார்.

ஜேக்கப் டஃபி அவரை 16வது ஓவரில் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்கச் செய்தார்.முன்னதாக, இந்திய அணியின் இன்னிங்ஸை அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 84 ரன்கள் விளாசி சிறப்பாக அமைத்தார். அவர் சூர்யகுமாருடன் இணைந்து 99 ரன்கள் சேர்த்தார். இறுதிக்கட்டத்தில், ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் அடித்து, இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை அடைய உதவினார்.

டேரில் மிட்செல் வீசிய கடைசி ஓவரில் ரிங்கு 21 ரன்கள் குவித்தார்.இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெறும் வலுவான நிலையில் உள்ளது. ஹர்திக் பாண்டியா 2 ஓவரில் 5 டாட் பால்களுடன் 20 ரன்கள் விட்டு கொடுத்து 1 விக்கெட் விழ்த்தினார். இதே போன்றுமற்றொரு ஆல்ரவுண்டரான சிவம் துபே 3 ஓவரில் 28 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Story first published: Thursday, January 22, 2026, 7:00 [IST]
Other articles published on Jan 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+