Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ- இனி நியூசிலாந்துக்கு ஆப்பு தான்.. 150 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய இந்திய வீரர் தேர்வு

மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கும் பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

மூன்றாவது டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியை தழுவினால் ஒயிட்வாஷ் ஆகிவிடும். இதனால் இந்த தோல்வியை தவிர்ப்பதற்காக இந்திய அணி ஒரு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டு இருக்கிறது. அதன்படி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிவேகமாக பந்து வீசக்கூடிய 22 வயது வீரரான ஹர்ஷித் ராணாவை இந்திய அணி நிர்வாகம் சேர்த்து இருக்கிறது.

ind vs nz harshit rana sarfaraz khan

இந்திய அணியின் ரிசர்வ் வீரராக ஹர்சித் ராணா இடம்பெற்றிருந்தாலும், ரஞ்சிப் போட்டியில் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பதற்காக ஹர்ஷித் ராணா இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த சூழலில் 22 வயதான ஹர்ஷித், டெல்லி அணிக்காக விளையாடி பந்துவீச்சில் 5 விக்கெட் மற்றும் பேட்டிங்கில் அரைசதம் அடித்திருக்கிறார்.

ind vs nz harshit rana sarfaraz khan

இந்த சூழலில் ஹர்ஷித் ராணா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த தொடரில் இந்திய அணி 5 வேக பந்துவீச்சாளர்களை பயன்படுத்த இருக்கிறது. இந்த சூழலில் ஹர்ஷித் ராணாவை ஒரு ஆல் ரவுண்டராக பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது. இந்த சூழலில் ஹர்ஷித் ராணா ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாகவே அவரை பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது.

ind vs nz harshit rana sarfaraz khan

அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆகாஷ் தீப் நீக்கப்பட்டு ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய ஹர்ஷித் ராணா மும்பை வான்கடே மைதானத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, October 29, 2024, 19:36 [IST]
Other articles published on Oct 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+