Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: புவனேஸ்வர் குமார் கம்பேக் தருவார் என நினைத்து கூட பார்க்கல.. புஜாரா பாராட்டு

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டதை அடுத்து, அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று தான் நினைக்கவே இல்லை என்று முன்னாள் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். அக்டோபர் 22ஆம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.

புவனேஷ்வர் குமார் கடைசியாக நவம்பர் 22, 2022 அன்று நேப்பியரில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார். அந்தப் போட்டியில் அவர் 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 35 ரன்கள் கொடுத்திருந்தார்.புவனேஷ்வர் குமாரின் கம்பேக் குறித்து பேசிய புஜாரா, இது ஆச்சரியமாக இருந்தாலும் ஒரு சிறந்த முடிவு என்று பாராட்டியுள்ளார்.

Bhuvneshwar kumar

இந்திய கிரிக்கெட்டில் தான் பார்த்த மிகத் திறமையான பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமாரும் ஒருவர் என்று பாராட்டிய புஜாரா. "ஆம், இது ஆச்சரியமாக இருந்தது. அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் இது ஒரு சிறந்த முடிவு. புவனேஷ்வர் குமார் போன்ற திறமையான ஒருவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இந்திய கிரிக்கெட்டில் நான் பார்த்த மிகத் திறமையான மற்றும் நுணுக்கமான பந்துவீச்சாளர்களில் அவர் முக்கியமான ஒருவர்" என்றார்.

புவனேஷ்வர் குமாரின் உடற்தகுதி மற்றும் அவரது கடின உழைப்பைப் பாராட்டிய புஜாரா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி இரண்டு ஐபிஎல் பட்டங்களை வெல்வதற்கு அவர் முக்கியக் காரணமாக இருந்ததைக் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். "துரதிர்ஷ்டவசமாக, அவர் நீண்ட காலமாக இந்தியாவின் டி20 அல்லது ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை, இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனால் தற்போது அவர் கம்பேக் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தனது ஆட்டத்திலும், உடற்தகுதியிலும் அவர் கடினமாக உழைத்துள்ளார். ஆர்சிபி அணிக்காக இரண்டு பட்டங்களை வென்று கொடுத்துள்ளார். மிகச் சிறப்பாக பந்துவீசியுள்ள அவருக்கு இந்த வாய்ப்பு தகுதியானது தான். நியூசிலாந்தில் விளையாடும் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கும்போது அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்" என்றார்.

புவனேஷ்வர் குமார் இதுவரை 87 டி20 போட்டிகளில் விளையாடி 23.10 சராசரியிலும், 6.96 எகனாமி ரேட்டிலும் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் டி20 கிரிக்கெட்டில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அடங்கும்.ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

IND vs WI: இந்த வீரர் 5 டி20 போட்டியிலும் விளையாட வேண்டும்.. வேகப்பந்துவீச்சு குறித்தும் ஆகாஷ் கருத்து

IND vs WI: இந்த வீரர் 5 டி20 போட்டியிலும் விளையாட வேண்டும்.. வேகப்பந்துவீச்சு குறித்தும் ஆகாஷ் கருத்து

இந்த மகுடத்தை வெல்வதில் புவனேஷ்வர் குமார் முக்கியப் பங்கு வகித்தார். அந்த சீசனில் புவனேஷ்வர் குமார் 16 போட்டிகளில் விளையாடி 17.89 சராசரியிலும், 7.95 எகனாமி ரேட்டிலும் 28 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவரது சிறந்த பந்துவீச்சு 4/23 ஆகும். 17 போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்திய ககிசோ ரபாடாவுக்கு அடுத்தபடியாக புவனேஷ்வர் குமார் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 7, 2026, 7:30 [IST]
Other articles published on Oct 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+