For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ:நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. இறுதியில் பரபரப்பு!இந்திய அணி திரில் வெற்றி

வடோரா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறு பந்துகள் எஞ்சிய நிலையில் திரில் வெற்றியை பெற்றது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வடோராவில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர். நடு வரிசையில் டாரல் மிட்செக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 71 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.

Ind vs NZ

இதன் காரணமாக நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் சிராஜ், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா, மூன்று பவுண்டரி, இரண்டு சிக்சர் என அதிரடி காட்ட 29 பந்துகளின் அவர் 26 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 118 ரன்களை சேர்த்தது. கில் 71 பந்துகளை எதிர் கொண்டு 56 ரன்களில் ஆட்டம் இழந்தார் இதைத் தொடர்ந்து காயத்திலிருந்து மீண்டு களத்திற்கு வந்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்பினார். இருவரும் களத்தில் நின்ற போது நியூசிலாந்து அணியால் வெற்றி பெறவே முடியாது என்ற நிலை இருந்தது.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்ரேயாஸ் 47 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 91 பந்துகளை எதிர்கொண்டு 93 ரன்கள் சேர்த்தார். இதில் எட்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். சதத்தை விராட் கோலி மிஸ் செய்ததால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

விராட் கோலி ஆட்டம் இழந்த பிறகு திடீரென்று அணியில் சரிவு ஏற்பட்டது. ஜடேஜா நான்கு ரன்கள் எடுக்க களத்திற்கு வந்த ஹர்ஷித் ரானா முதலில் தடுமாற, பின்னர் பவுண்டரி, சிக்சர் என 23 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எனினும் ராகுல் கடைசி வரை நின்று ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க இந்திய அணி 49 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது.

இதன் மூலம் மூன்று நாள் போட்டி கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 49 வது ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரி,ஒரு சிக்சர் என மொத்தம் 17 ரன்கள் குவிக்க அது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Story first published: Sunday, January 11, 2026, 21:51 [IST]
Other articles published on Jan 11, 2026
English summary
Ind vs NZ- India Beat New Zealand by 4 wickets in thrilling 1st odi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+