Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்திய அணி அபார வெற்றி.. நியூசிலாந்து அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

நாக்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. டி20 உலக கோப்பைக்கு முன்பாக இந்த தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.

இந்த சூழலில் நாக்பூரில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 10 ரன்களில் ஆட்டமிழக்க மூன்றாவது வீரராக விளையாடிய இசான் கிஷன் எட்டு ரன்களில் வெளியேறினார்.

Ind vs NZ

இதனால் இந்திய அணி 27 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடித்த அபிஷேக் ஷர்மா 22 ரன்களில் அரை சதத்தை கடந்தார்.

இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக அதிவேக அரை சதம் அடித்த ரோகித் சர்மா ராகுல் சாதனையை அபிஷேக் ஷர்மா முறியடித்தார். இதேபோன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 25 பந்துகளுக்கு கீழ் எட்டு முறை அரை சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையும் அபிஷேக் ஷர்மா படைத்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த ஜோடி மூன்றாவது விக்கட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர் அடங்கும். நடுவரிசையில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 25 ரன்கள் எடுக்க சிவம் துபே ஒன்பது ரன்களிலும், அக்சர் பட்டேல் 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.

இறுதிக்கட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ரிங்கு சிங், மூன்று சிக்சர், நான்கு பவுண்டரி என 20 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது. 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆட்டத்தின் இரண்டாவது பந்திலே தனது முதல் விக்கெட்டை இழந்தது.

முன்னாள் சிஎஸ்கே வீரர் கான்வே டக் அவுட் ஆனார். ரச்சின் ரவீந்திரநாஒரு ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ராபின்சன் 21 ரன்கள் எடுத்தார். இந்த சூழலில் நடுவரிசையில் ஜோடி சேர்ந்த கிளன்சன் மற்றும் மார்க் சாப்மன் ஆகியோர் நியூசிலாந்து அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினர்.சிறப்பாக விளையாடிய கிலன் பிலிப்ஸ் 40 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

சாப்மன் 24 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணியும் ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஆனால் தேவைக்கு ரன்கள் அதிகமாகவும், பந்துகள் குறைவாகவும் இருந்ததால் நியூசிலாந்து அணியால் இந்தியாவின் இலக்கு அருகே கூட போக முடியவில்லை. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 190 எண்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது இதன் மூலம் இந்தியாவில் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய பந்துவீச்சு தரப்பில் சிவந்துபே மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Story first published: Wednesday, January 21, 2026, 22:55 [IST]
Other articles published on Jan 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+