For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்பர் 1 டெஸ்ட் டீமா இது? இந்திய அணி மோசமான ஸ்கோர்.. செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்!

Recommended Video

IND Vs NZ: முதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து | Test match

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்கு சுருண்டது.

உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக வலம் வரும் இந்திய அணி, படுமோசமான பேட்டிங் செயல்பாட்டை வெளிக்காட்டி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்திய மண்ணில் கில்லியாக இருக்கும் இந்திய அணி, வெளிநாடுகளில் மோசமாக ஆடி வருவது மீண்டும் தொடர்கிறது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்

இந்தியா 2018இன் இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்றது. அந்த தொடரின் போது ஆஸ்திரேலிய அணி அனுபவ வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இன்றி, இளம் வீரர்களை வைத்துக் கொண்டு வெற்றி பெற தடுமாறி வந்தது. அந்த பலவீனமான அணியைத் தான் இந்தியா வெளிநாட்டு மண்ணில் வென்று இருந்தது.

இந்திய மண்ணில் வெற்றிகள்

இந்திய மண்ணில் வெற்றிகள்

பலம் குறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. அடுத்து இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளை பெரும் ஆதிக்கம் செலுத்தி வென்றது. தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்திய அணி, அச்சுறுத்தும் அணியாகவும் தோன்றியது.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

ஆனால், அது உண்மையல்ல என காட்டுவதைப் போல அமைந்தது நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸ். முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்கம் மோசம்

துவக்கம் மோசம்

நியூசிலாந்து மண்ணில் பேட்டிங் செய்வது கடினம் என்றாலும், இந்தியா 250 ரன்களையாவது எடுத்தால் போதும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. துவக்க வீரர்கள் ப்ரித்வி ஷா 16 ரன்னிலும், மயங்க் அகர்வால் 34 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

அனுபவ வீரர்கள் சறுக்கல்

அனுபவ வீரர்கள் சறுக்கல்

அடுத்து அனுபவ வீரர்கள் புஜாரா, விராட் கோலி அணியைக் காப்பார்கள் என எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள் ரசிகர்கள். புஜாரா 11 ரன் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். விராட் கோலி 2 ரன்னில் மோசமாக கேட்ச் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

பண்ட் ரன் அவுட்

பண்ட் ரன் அவுட்

துணை கேப்டன் ரஹானே பொறுப்பாக ஆடி வந்தார். ஹனுமா விஹாரி 7 ரன்னில் அவுட் ஆனார். பண்ட் நிதான ஆட்டம் ஆடி நம்பிக்கை அளித்தார். அப்போது ரஹானே செய்த தவறால் ரன் அவுட் ஆனார் பண்ட். அவர் 19 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

ரஹானே 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அஸ்வின் டக் அவுட் ஆனார். கடைசி நேரத்தில் ஷமி 21 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் 150ஐ கடக்க உதவினார். இந்தியா 68.1 ஓவரில் 165 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இரு பந்துவீச்சாளர்கள்

இரு பந்துவீச்சாளர்கள்

நியூசிலாந்து அணியின் அறிமுக வேகப் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். அந்த அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் டிம் சவுதி 4 விக்கெட்களை வீழ்த்தினார். நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சுக்கு பதில் அளிக்க முடியாமல் சரிந்தது உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி.

மோசமான சாதனை

மோசமான சாதனை

விராட் கோலியின் தலைமையில் டெஸ்ட் போட்டியில் இது இந்திய அணியின் மிக குறைந்த முதல் இன்னிங்க்ஸ் ரன்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 2018இல் லார்ட்ஸ் மைதானத்தில் 107 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. அதற்கு அடுத்து தற்போது 165 ரன்கள் எடுத்தது இரண்டாவது மோசமான முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோர் ஆகும்.

ரசிகர்கள் கருத்து

ரசிகர்கள் கருத்து

நியூசிலாந்து மண்ணில் பேட்டிங் செய்வது கடினம் என்றலுஎன்றாலும், இந்திய அணியின் அனுபவ வீரர்கள் மோசமான முறையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததும், ரஹானே, பண்ட் ரன் அவுட் ஆக காரணமாக இருந்ததும் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Story first published: Saturday, February 22, 2020, 9:30 [IST]
Other articles published on Feb 22, 2020
English summary
IND vs NZ : India bundled out for 165 runs which is second lowest score under Kohli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+