For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் ஒரே நாள்.. அத்தோட வீட்டுக்கு கிளம்புங்க.. நியூசி. அதிரடி.. தோல்வியின் விளிம்பில் இந்தியா!

கிறைஸ்ட்சர்ச் : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்க்ஸில் இந்தியா வெறும் 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

Recommended Video

IND VS NZ 2ND TEST | New zealand beat India by 7 wickets

அடுத்து பேட்டிங்கில் சொதப்பி இரண்டாம் நாள் முடிவில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து, தோல்வியின் விளிம்பில் உள்ளது.

மூன்றாம் நாள் போட்டி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்ப் போட்டியில் இந்தியா வெல்வது மிகக் கடினம்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இரண்டாவது டெஸ்ட் போட்டி

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும் என்ற சூழ்நிலையில் இந்தியா ஆடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் முதலில் பேட்டிங் செய்தது.

மூன்று அரைசதம்

மூன்று அரைசதம்

இந்திய அணியில் ப்ரித்வி ஷா அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். அடுத்து புஜாரா, ஹனுமா விஹாரி இருவரும் அரைசதம் கடந்தனர். மூவரும் அரைசதம் அடித்த உடன் சிறிது நேரத்தில் ஆட்டமிழந்து, பெரிய அளவில் ரன் குவிக்காமல் ஏமாற்றம் அளித்தனர்.

தொடர்ந்த சொதப்பல்

தொடர்ந்த சொதப்பல்

மற்ற வீரர்கள் மிகவும் சொற்ப ரன்களே எடுத்தனர். அரைசதம் அடித்த மூவருக்கு அடுத்து அதிக ரன் எடுத்தது முகமது ஷமி தான். அவர் 16 ரன்கள் எடுத்து இருந்தார். கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது. இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 242 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து பேட்டிங்

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணிக்கு டாம் லாதம் 52 ரன்கள் குவித்து அபார துவக்கம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் டாம் பிளண்டல் 30 ரன்கள் எடுத்தார். மற்ற டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினர்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

முதல் போட்டியில் விக்கெட் வீழ்த்தத் திணறிய பும்ரா மற்றும் ஷமி இந்தப் போட்டியில் அசத்தலாக விக்கெட் எடுத்தனர். உமேஷ் யாதவ் 1 விக்கெட் எடுத்தார். கேன் வில்லியம்சன் 3, ராஸ் டெய்லர் 15, நிக்கோல்ஸ் 14, வாட்லிங் 0 என முக்கிய வீரர்கள் எளிதாக ஆட்டமிழந்தனர்.

பும்ரா 2 விக்கெட்

பும்ரா 2 விக்கெட்

51 வது ஓவரில் பும்ரா இந்திய அணிக்கு பெரிய திருப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த ஓவரில் வாட்லிங், டிம் சவுதி என இரண்டு வீரர்கள் டக் அவுட் ஆக்கி வெளியே அனுப்பினார். நியூசிலாந்து அணி 153 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது.

ஜேமிசன் அதிரடி

ஜேமிசன் அதிரடி

அதன் பின் இந்தியா நியூசிலாந்து அணியை 200 ரன்களுக்குள் வீழ்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ஜேமிசன் கடந்த போட்டியைப் போலவே இந்த முறையும் அதிரடி ஆட்டம் ஆடி 63 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார்.

7 ரன்கள் முன்னிலை

7 ரன்கள் முன்னிலை

நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா வெறும் 7 ரன்கள் முன்னிலை பெற்றது. 50 - 60 ரன்கள் வரை இந்தியா முன்னிலை பெறும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் ஏமாற்றம் அளித்தது இந்திய பந்துவீச்சு.

4 விக்கெட் காலி

4 விக்கெட் காலி

இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. ப்ரித்வி ஷா 14, மயங்க் அகர்வால் 3, கோலி 14, புஜாரா 24, ரஹானே 9, உமேஷ் யாதவ் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா 90 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறது.

Story first published: Sunday, March 1, 2020, 13:27 [IST]
Other articles published on Mar 1, 2020
English summary
IND vs NZ : India failed to gain more lead in first innings, as Kyle Jamieson scored a quick 49 runs.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+