Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: 147 ஆண்டு வரலாற்றில் எந்த அணியும் செய்யாத இமாலய சாதனை.. இந்திய அணி சிக்ஸ் ரெக்கார்டு

பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத இமாலய சிக்ஸ் ரெக்கார்டு ஒன்றை இந்திய அணி செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி வருகிறது. அதன் மூலம் அதிக சிக்ஸர்களை அடித்து இருக்கிறது.

தற்போது இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து சிக்ஸ் அடித்து இருக்கிறது. அதன் மூலம் இந்திய அணி 2024 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளின் 102 சிக்ஸ் அடித்து சாதனை படைத்து இருக்கிறது. ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸ் அடித்த முதல் அணி என்ற மைல்கல் சாதனையை இந்திய அணி செய்துள்ளது. இதற்கு முன் எந்த அணியும் ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸ் அடித்ததில்லை.

ind vs nz india new zealand

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி ஒரே ஆண்டில் அதிகபட்சமாக 89 சிக்ஸ் அடித்து இருந்தது. அதற்கு முன் 2021 ஆம் ஆண்டு இந்திய அணி 87 சிக்ஸ் அடித்து இருந்தது. அந்த சாதனையை 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி முறியடித்து இருந்தது. இங்கிலாந்து அணியின் சாதனையை கடந்த மாதம் இந்திய அணி மீண்டும் முறியடித்து நியூசிலாந்து தொடருக்கு முன் 97 சிக்ஸ் அடித்து இருந்தது.

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஐந்து சிக்ஸ் அடித்ததன் மூலம், 100 சிக்ஸ் என்ற மைல்கல்லை தாண்டி மொத்தமாக 102 சிக்ஸ் அடித்து இருக்கிறது இந்திய அணி. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி தான் அதிரடி ஆட்டம் ஆடி வருகிறது என்ற கருத்தை உடைத்து எறிந்து இருக்கிறது இந்திய அணி.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனபோதும், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி வருகிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் எடுத்து இருந்தது. அதன் மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

இத்தனை பெரிய பின்னடைவை சந்தித்த பின்னரும் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி ஆட்டம் ஆடி 49 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து இருக்கிறது. ரோஹித் சர்மா 52 ரன்களும், ஜெய் ஸ்வால் 35 ரன்களும், விராட் கோலி 70 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சர்ஃபராஸ் கான் 78 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 125 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

Story first published: Friday, October 18, 2024, 19:34 [IST]
Other articles published on Oct 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+