Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

147 வருட டெஸ்ட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனையை செய்யப் போகும் இந்திய அணி

பெங்களூரு: நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் செய்யாத இமாலய மைல் கல் சாதனை ஒன்றை செய்ய உள்ளது. ஒரே ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் அடித்த அணி என்ற சாதனையை ஏற்கனவே இந்தியா செய்து இருக்கிறது.

அதில் மேலும் ஒரு மைல் கல்லாக ஒரே ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸ் அடிக்க உள்ளது இந்திய அணி. 2024 ஆம் ஆண்டு இந்தியா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 97 சிக்ஸ் அடித்து இருக்கிறது. இதுவே ஒரே ஆண்டில் ஒரு அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த அதிக சிக்ஸ் எண்ணிக்கை ஆகும். இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மட்டுமே உள்ளன.

ind vs nz india new zealand


ஒரே ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் ஐந்து அணிகள் :

1 - இந்தியா: 2024 - 97 சிக்ஸர்கள்*

2 - இங்கிலாந்து: 2022 - 89 சிக்ஸர்கள்

3 - இந்தியா: 2021 - 87 சிக்ஸர்கள்

4 - நியூசிலாந்து: 2014 - 81 சிக்ஸர்கள்

5 - நியூசிலாந்து: 2013 - 71 சிக்ஸர்கள்

2021 ஆம் ஆண்டு இந்திய அணி 87 சிக்ஸ் அடித்து ஒரே ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் அடித்த அணி என்ற சாதனையை செய்திருந்தது. நியூசிலாந்து அணியின் ஏழு ஆண்டு சாதனையை இந்தியா அப்போது முறியடித்து இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு இங்கிலாந்து இந்தியாவின் சாதனையை முறியடித்தது. 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி 89 சிக்ஸ் அடித்து இருந்தது.

அந்த சாதனையை 2024 ஆம் ஆண்டு இந்திய அணி முறியடித்து இருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை இந்திய அணி 97 சிக்ஸ் அடித்து இருக்கிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்தியா இன்னும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகளில் இந்தியா 100 சிக்ஸ் என்ற மைல்கல்லை எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிசம்பர் மாதம் வரை நான்கு போட்டிகளில் இந்திய அணி விளையாடும். அதில் மேலும் பல சிக்ஸர்களை இந்திய அணி அடிக்கும் என்பதால் இந்த ஆண்டில் 125 சிக்ஸ் என்ற எண்ணிக்கையை எட்ட அதிக வாய்ப்பு உள்ளது. இது அசாதாரணமான டெஸ்ட் சாதனையாக மாற வாய்ப்பு உள்ளது

இந்த சாதனையை இந்தியா செய்ய முக்கிய காரணம் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவர்தான். 2024 ஆம் ஆண்டு ஜெய்ஸ்வால் 29 சிக்ஸ் அடித்து இருக்கிறார். சுப்மன் கில் 16 சிக்ஸ் அடித்து இருக்கிறார். ரோஹித் சர்மா 10 சிக்ஸ் அடித்து இருக்கிறார். இவர்களை அடுத்து ரவீந்திர ஜடேஜா 8 சிக்ஸரும், துருவ் ஜுரல் 7 சிக்ஸரும் அடித்துள்ளனர்.

Story first published: Tuesday, October 15, 2024, 21:19 [IST]
Other articles published on Oct 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+