For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

8 சிக்ஸ்.. இமாலய இலக்கு.. மிரண்டு போன நியூசிலாந்து.. புரட்டி எடுத்த மூன்று இந்திய வீரர்கள்!

Recommended Video

கேப்டனை ஏமாற்றிய 2 அறிமுக வீரர்கள் | India vs New Zealand 1st ODI match updates

ஹாமில்டன் : இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி, ரன் குவித்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணி 8 சிக்ஸ் அடித்து நியூசிலாந்து அணியை மிரள வைத்தது.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழந்து 347 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணிக்கு 348 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது இந்திய அணி.

இந்தியா - நியூசிலாந்து போட்டி

இந்தியா - நியூசிலாந்து போட்டி

இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் போட்டி நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் துவங்கியது. இந்த ஆடுகளத்தில் சேஸிங் செய்வது எளிது எனஎன்பதால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

நியூசிலாந்து டாஸ்

நியூசிலாந்து டாஸ்

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் கோலி டாஸின் போது இந்திய அணியில் இரு அறிமுக வீரர்கள் இடம் பெற்று இருப்பதை அறிவித்தார்.

இருவர் அறிமுகம்

இருவர் அறிமுகம்

துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இடம் பெறாத நிலையில், அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக இடம் பெற்ற மயங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா இந்தப் போட்டியில் துவக்கம் அளித்தனர். இவர்கள் இருவருக்கும் இது அறிமுக ஒருநாள் போட்டி ஆகும்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி வீரர்கள் - மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, விராட் கோலி ( கேப்டன் ), ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, குல்தீப் யாதவ், பும்ரா.

துவக்க வீரர்கள் ஏமாற்றம்

துவக்க வீரர்கள் ஏமாற்றம்

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா துவக்கம் அளித்து ஆடினர். அவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினர். ப்ரித்வி ஷா 20 ரன்களிலும், மயங்க் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்தியா நிதான ஆட்டம்

இந்தியா நிதான ஆட்டம்

2 விக்கெட்கள் இழந்த நிலையில் இந்திய அணி நிதான ஆட்டம் ஆடியது. கோலி அரைசதம் கடந்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். மிக நிதான ஆட்டம் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், பின்னர் வேகம் எடுத்து தன் முதல் ஒருநாள் போட்டி சதம் கடந்தார்.

ராகுல் அபாரம்

ராகுல் அபாரம்

ஸ்ரேயாஸ் ஐயர் 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராகுல் அபார ஆட்டம் ஆடி, 6 சிக்ஸர்கள் பறக்க விட்டார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று ஆடிய ராகுல், 64 பந்துகளில் 88 ரன்கள் குவித்து இருந்தார். ஜாதவ் அவருக்கு ஒத்துழைத்து ஆடினார்.

எட்டு சிக்ஸ்

எட்டு சிக்ஸ்

இந்தப் போட்டியில் ராகுல் ஆறு சிக்ஸர்கள் அடித்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேதார் ஜாதவ் தலா ஒரு சிக்ஸ் அடித்தனர். இந்திய அணி எட்டு சிக்ஸ் அடித்ததால், அணியின் ஸ்கோர் கடைசி நேரத்தில் வேகமாக ஏறியது.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

ராகுல் 88 ரன்களும், கேதார் ஜாதவ் 26 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணிக்கு 348 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது இந்திய அணி.

Story first published: Wednesday, February 5, 2020, 12:23 [IST]
Other articles published on Feb 5, 2020
English summary
IND vs NZ : India vs New Zealand 1st ODI match updates and highlights
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+