Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக சாதனை.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. இந்தியா - நியூசி. போட்டியில் நடந்த தரமான சம்பவம்!

Recommended Video

IND vs NZ T20 registered new World record | India Won

ஆக்லாந்து : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இணைந்து முதல் டி20 போட்டியில் உலக சாதனை ஒன்றை செய்துள்ளன.

முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இரண்டு அணிகளும் 200 ரன்களை கடந்து அசத்தின.

இந்தப் போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் நடந்திராத ஒரு முக்கிய சாதனை ஆகும்.

ஐந்து அரைசதங்கள் சாதனை

ஐந்து அரைசதங்கள் சாதனை

மூன்று நியூசிலாந்து வீரர்களும், இரண்டு இந்திய வீரர்களும் அரைசதம் கடந்தனர். இதுவரை சர்வதேச டி20 போட்டி ஒன்றில் ஐந்து அரைசதங்கள் அடிக்கப்பட்டதில்லை. அந்த அரிய சாதனையை பதிவு செய்தது இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் போட்டி.

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்டிங்

இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டி நடந்த ஆடுகளம் ரன் குவிக்க எளிதான ஆடுகளம் என்பதால் கேப்டன் கோலி அந்த முடிவை எடுத்தார். நியூசிலாந்து அணி முதலில் அதிரடியாக பேட்டிங் செய்தது.

மூவர் அரைசதம்

மூவர் அரைசதம்

அந்த அணியின் கோலின் மன்றோ 59, கேப்டன் கேன் வில்லியம்சன் 51, ராஸ் டெய்லர் 54* ரன்கள் குவித்தனர். இவர்கள் மூவரின் அரைசதத்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.

ராகுல் அதிரடி

ராகுல் அதிரடி

204 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிரடி வீரர் ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். எனினும், மற்றொரு துவக்க வீரர் ராகுல் 27 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.

ஸ்ரேயாஸ் ஐயர் அபாரம்

ஸ்ரேயாஸ் ஐயர் அபாரம்

கேப்டன் விராட் கோலி 45 ரன்கள் குவித்து அரைசதத்தை 5 ரன்களில் நழுவ விட்டார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பாக ஆடினார். அவர் அழுத்தமான நேரத்திலும் 29 பந்துகளில் 58 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

ராகுல், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தால் இந்திய அணி 19 ஓவர்களில் 204 ரன்களை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மன்றோ, கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என ஐந்து வீரர்கள் அரைசதம் கடந்து இருந்தனர்.

புதிய உலக சாதனை

புதிய உலக சாதனை

இது சர்வதேச டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை ஆக அமைந்தது. இந்தப் போட்டியில் மேலும் பல சாதனைகள் நிகழ்ந்தன. இந்திய அணி 204 ரன்களை துரத்தி வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி நான்காவது முறையாக 200க்கும் அதிகமான ரன்களை துரத்தி வெற்றி பெற்றுள்ளது.

அதிகபட்ச சேஸிங் வெற்றி

அதிகபட்ச சேஸிங் வெற்றி

மேலும், இந்த போட்டியில் தன் மூன்றாவது அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங்கை பதிவு செய்தது இந்திய அணி. இதற்கு முன் இலங்கை (207 ரன்கள்), வெஸ்ட் இண்டீஸ் (208 ரன்கள்) அணிகளுக்கு எதிராக தன் முதல் இரண்டு அதிகபட்ச சேஸிங்கை கொண்டுள்ளது இந்திய அணி.

முதல் இடம்

முதல் இடம்

மேலும், இந்திய அணி மட்டுமே உலக அரங்கில் இதுவரை நான்கு 200க்கும் அதிகமான ரன் சேஸிங்கை செய்துள்ளது. அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது இந்திய அணி. அடுத்த இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா இரண்டு முறை 200க்கும் அதிகமான இலக்கை சேஸிங் செய்துள்ளது.

இரண்டாவது வெற்றி

இரண்டாவது வெற்றி

மேலும், இந்த வெற்றி நியூசிலாந்து மண்ணில், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா பெறும் இரண்டாவது டி20 வெற்றி ஆகும். கடந்த ஆண்டு இந்திய அணி ஒரு டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 25, 2020, 11:08 [IST]
Other articles published on Jan 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+