Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சம்மட்டி அடி வாங்கிய இந்திய அணி.. 9 விக்கெட் சாய்த்து ஓடவிட்ட பவுலர்.. நியூசி. 100வது வெற்றி!

வெல்லிங்டன்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Recommended Video

INDvsNZ 1st Test | New Zealand won by 10 wickets | இந்தியாவுக்கு மோசமான தோல்வி

முதல் இன்னிங்க்ஸில் படுமோசமாக பேட்டிங் செய்து, கடைசி 3 விக்கெட்களை வீழ்த்த முடியாமல் திணறி, இரண்டாம் இன்னிங்க்ஸிலும் சொதப்பிய இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தன் முதல் தோல்வியை பதிவு செய்தது.

நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் தன் நூறாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

டாஸ் தோல்வி

டாஸ் தோல்வி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் டாஸ் தோல்வி அடைந்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸில் துவக்க வீரர் ப்ரித்வி ஷா 16 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து இந்திய அணி விக்கெட்களை விரைவாக இழக்கத் துவங்கியது. புஜாரா 11, கோலி 2 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

இந்தியா சறுக்கல்

இந்தியா சறுக்கல்

மயங்க் அகர்வால் 34, ரஹானே 46 ரன்கள் எடுத்து ஓரளவு ரன் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக ஆடி தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். ரிஷப் பண்ட் 19 ரன்கள் எடுத்த நிலையில், ரஹானே செய்த தவறால் தன் விக்கெட்டை இழந்தார்.

நியூசிலாந்து பந்துவீச்சு

நியூசிலாந்து பந்துவீச்சு

இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியின் டிம் சவுதி 4 விக்கெட் வீழ்த்தினார். அறிமுக வீரர் கைல் ஜேமிசன் 4 விக்கெட்களும், பவுல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர்களிடமே 9 விக்கெட்களையும் இழந்தது.

நியூசிலாந்து முதல் இன்னிங்க்ஸ்

நியூசிலாந்து முதல் இன்னிங்க்ஸ்

அடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. நியூசிலாந்து அணியில் டாம் பிளண்டல் 30, கேன் வில்லியம்சன் 89, ராஸ் டெய்லர் 44 ரன்கள் சேர்க்க அந்த அணி 225 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து இருந்தது. அடுத்த 3 விக்கெட்களை இந்தியா விரைவாக வீழ்த்தினால், போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.

இந்தியா சொதப்பல்

இந்தியா சொதப்பல்

ஆனால், இந்திய அணி மோசமாக சொதப்பியது. கடைசி மூன்று விக்கெட்களை வீழ்த்துவதற்குள் நியூசிலாந்து அணி 123 ரன்கள் சேர்த்தது, கிராண்ட்ஹோம் 43, ஜேமிசன் 44, ட்ரென்ட் பவுல்ட் 38 ரன்கள் சேர்த்தனர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 348 ரன்கள் எடுத்தது.

இந்தியா பந்துவீச்சு

இந்தியா பந்துவீச்சு

இந்திய அணியில் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசினார். அவர் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். அஸ்வின் 3, ஷமி 1, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர். 7 விக்கெட்களை வீழ்த்தும் வரை முன்னிலையில் இருந்த இந்திய பந்துவீச்சு, பின்னர் சறுக்கியது.

இரண்டாம் இன்னிங்க்ஸ்

இரண்டாம் இன்னிங்க்ஸ்

183 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கியது இந்திய அணி. 400 ரன்கள் எடுத்தால் மட்டும் வெற்றியை பற்றி சிந்திக்க முடியும் என்ற நிலையில், இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸிலும் பேட்டிங்கில் சொதப்பியது. மயங்க் அகர்வால் 58 ரன்கள் எடுத்தது மட்டுமே ஆறுதலாக அமைந்தது.

நியூசிலாந்து வெற்றி

நியூசிலாந்து வெற்றி

இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டிம் சவுதி இரண்டாம் இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி, இந்தப் போட்டியில் 9 விக்கெட்கள் சாய்த்தார். நியூசிலாந்து அணிக்கு 9 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது இந்தியா. நியூசிலாந்து அணி அந்த இலக்கை 1.4 ஓவரில் எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் தோல்வி

முதல் தோல்வி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி தன் முதல் தோல்வியை சந்தித்து, 60 புள்ளிகளை இழந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோல்வி அடையாத இந்திய அணி, 2020ஆம் ஆண்டில் தன் முதல் டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளது.

Story first published: Friday, April 2, 2021, 11:21 [IST]
Other articles published on Apr 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+